கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்குத் தேனீ வளர்ப்பு மற்றும் ஊடுபயிர்கள் குறித்துக் கல்லூரி மாணவர்களால் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
கிராமப்புற வேளாண்மைப் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமிர்தா வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டில் படித்து வரும் மாணவர்கள் பொட்டையாண்டிபுரம்பு அருகில் உள்ள கல்லாபுரத்தில் தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சியினை விவசாயிகளுக்கு அளித்தனர். முப்பதுக்கும் அதிகமான விவசாயிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், தேனீ வளர்ப்பு பற்றி பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். J.அரவிந்த் உதவியுடன் கல்லூரி மாணவர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
மேலும் படிக்க: மக்களே குட்நியூஸ்! தங்கம் விலை தொடர்ந்து சரிவு!!
தேனீக்கள் பொதுவாக மகரந்த சேர்க்கை எனும் ஒரு முக்கியமான செயல்களைச் செய்கின்றன. தேனீக்களும் இன்னும் சில பூச்சிகளும் மட்டுமே செய்யக்கூடிய மகரந்த சேர்க்கையானது பயிர்களின் இடையே பெரும் பங்கை வகிக்கின்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். மேலும், தென்னைப் பூக்களில் ஆண் பகுதியும் பெண் பகுதியும் தனித்து இருப்பதால் மகரந்த சேர்க்கையானது காற்றினாலோ பூச்சிகளாலோ தான் நடக்க வேண்டி இருக்கிறது.
தேனீக்களின் வகைகள், இனங்கள் குறித்தும், தேனீக்களை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பது குறித்தும் பலவகையான நுணுக்கங்களைத் தேனீ பெட்டி வைத்து எடுத்துக் விளக்கி இருக்கின்றனர். தேனீ வளர்ப்பதற்குப் பயன்படுத்தும் கருவிகள் பற்றியும் விளக்கம் கொடுத்துள்ளனர். அதோடு, விவசாயிகள் மத்தியில் தேனீக்களைப் பற்றிய பயம் நீங்க அவர்கள் கையில் தேனீ சட்டத்தைக் கொடுத்து பயத்தைப் போக்கினர்.
தேனீக்களின் ஆயுள் காலம், மற்றும் தேனீக்களால் விவசாயிகளுக்கும் பயிர்களுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவரிக்கப்பட்டது. தேனீயின் இனங்களும், அவை செய்யும் பணிகளையும் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகள் தங்களது தோட்டத்தில் தேனீ பெட்டி வைப்பதனால் மகரந்த சேர்க்கை அதிகரித்து, விவசாயியின் வருமானம் கூட வழிவகை செய்கிறது.
இந்த நிகழ்வில் விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இறுதியில் கேள்விகளும் கேட்டு விவசாயிகள் பயனடைந்தனர். தேனீக்களால் பயறுவகைப் பயிர்கள், எண்ணெய் வித்துகள், காய்கறிப் பயிர்கள் மற்றும் பழ மரங்களில் அயல் மகரந்தச் சேர்க்கை என்பது கூடுதலாக நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக பழங்களின் தரமும் அதிகரிப்பதற்குத் தேனீக்களின் வரவு என்பது மிகவும் இன்றியமையாதது ஆகும்.
சூரியகாந்தி, கடுகு முதலான எண்ணெய் வித்துப் பயிர்களில் உயர் மகசூல் பெறத் தேனீக்கள் பெரிதும் துணைபுரிகின்றன. அதோடு, தேனீக்களால் சூரியகாந்திப் பயிரில் விதை மகசூல் கூடுவதுடன் எண்ணெய் சத்தும், புரத அளவும், விதை எடையும், விதைகளின் முளைப்புத் திறனும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது.
தேனுக்காக மட்டும் தேனீ வளர்ப்பு என்கின்ற நிலை மாறி, மேலை நாடுகளில் இருப்பது போன்று பயிரில் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்துவதற்காகவும் திட்டமிட்டுத் தேனீ வளர்ப்பு நடைபெற்றால் தான் பயிர் மகசூலைக் கூட்ட இயலும் என்று விவசாயிகளுக்குக் கூறப்பட்டது.
மேலும் படிக்க
சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பஞ்சாயத்து தலைவர்கள் பிடித்து பராமரிக்க உத்தரவு!
விவசாயத்துறையில் இளைஞர்கள் அதிகளவில் பங்களிக்கவும்-ஒன்றிய அமைச்சர் தோமர் வேண்டுக்கோள்