தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், சிறுதானியங்களில் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிப்பது குறித்த 2 நாள் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
வேளாண்மைப் பல்கலைக்கழகம் (University of Agriculture)
வேளாண் அறிவியல் கல்வியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூரில் இயங்கி வருகிறது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் மூலம் அவ்வப்போது, விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கானப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம்.
2 நாள் பயிற்சி (2 day training)
இதன் ஒருபகுதியாக, செப்டம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில், சிறுதானியங்களில் இருந்து, மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் (VAP) தயாரிப்பது பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
சிறுதானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, சோளம், திணை, பனிவரகு போன்றவை மக்களால் உணவில் ஓரளவு சேர்த்துக் கொள்ளப்படுகிறது. நகர்புறங்களில் கேழ்வரகு மட்டும் பயன்பாட்டில் உள்ளது.
இதனைக் கருத்தில்கொண்டு, இந்த 2 நாள் பயிற்சியில்,சிறு தானிய வகைகளில் உள்ள சத்துக்களையும், அவற்றை உபயோகித்துத் தயாரிக்கப்படும் கீழ்காணும் மதிப்பூட்டப்பட்டத் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.
அவை
-
பாரம்பரிய உணவுகள்
-
பாஸ்தா உணவுகள்
-
அடுமனைப் பொருட்கள்
-
உடனடி தயார்நிலை உணவுகள்
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,500 /= 180% GST மட்டும் சேர்த்துத், தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது பயிற்யின் முதல் நாளில், பணம் செலுத்தியும் கலந்து கொள்ளலாம்.
கூடுதல் விபரங்களுக்கு
பேராசிரியர் மற்றும் தலைவர்
அறுவடை பின்சார் தொழில்நுட்பத் துறை
வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயமுத்தூர் - 641 003
தொலைபேசி எண் 0422-66112680/1340
என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
TNAUவில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை- வரும் 8ம் தேதி தொடக்கம்!