மும்பையில் மீனவர் வீசிய வலையில், அதிசயத் தங்கமீன் சிக்கியது. இதன் மூலம் அந்த மீனவர், ஒரே நாளில் ஓஹோவென மகா கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
மீன்படித் தொழில் (Fishing)
மும்பை அருகே உள்ள பால்கர் மாவட்டம் மர்பி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகாந்த் டாரே. மீனவரான டாரே மீன்பிடி தடைக்காலம் முடிந்ததையடுத்து, இந்த வாரத் தொடக்கத்தில், முதல் முறையாக தனது படகில் மீன்பிடிக்கச் சென்றார்.
மீன்பிடிக்க சென்றவருக்கு முதல் நாளிலேயே காத்திருந்தது இன்ப அதிர்ச்சி மட்டுமல்ல. மிக மிக அதிர்ஷ்டமும்கூட.
கோல் மீன்கள் (Cole fishes)
ஆம், வலையில் மிக அதிக அளவிலான மீன்கள் சிக்கின. இதைக் கவனித்த சந்திரகாந்த், உடனடியாக வலையை இழுத்தார். அப்போது வலையில் சுமார் 150 மீன்கள் இருந்தன. அவருடன் சென்றவர்கள் அந்த மீன்களைப் பார்த்ததும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர். ஏனென்றால் அந்த மீன்கள் அதிக விலை போகக்கூடிய கோல் மீன்கள் ஆகும்.
மருத்துவ குணம் (Medicinal properties)
இந்தவகைக் கோல் மீன்கள், ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இது பல்வேறு நாடுகளில் மிகவும் விலை மதிப்புமிக்கது.
இந்த மீனின் பாகங்கள் மருந்துகள் மற்றும் பிற விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
ரூ.1.33 கோடிக்கு ஏலம் (Auction for Rs.1.33 crore)
டாரே இந்த மீன்களுடன் கரை திரும்பியதும் அவை ஏலம் விடப்பட்டன. அப்போது, அந்த மீன்கள், சுமார் 1.33 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
குரோக்கர் மீன் (Crocodile fish)
இதனை உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஏலம் எடுத்துச் சென்றுள்ளனர். கோல் மீன்கள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் காணப்படும் ஒரு வகை கரும்புள்ளி குரோக்கர் மீன் வகையைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் புரோட்டோனிபியா டயாகாந்தஸ்.
விலை உயர்ந்த மீன் (Expensive fish)
இந்தோனேசியா, தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இதற்கு ஏகப்பட்ட டிமெண்ட் (Demand) உள்ளது. மிகவும் விலை உயர்ந்த கடல் மீன்களில் ஒன்றாக இது கருதப்படுவதால் இந்த மீன் தங்க மீன் என்று வர்ணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...