முன்பெல்லாம் தானிய விவசாயம் அதிகமாக செய்து வந்த நிலையில் விவசாயிகளின் பார்வை தோட்டக்கலை பயிர்களான பூக்கள், பழங்கள்,கிழங்குவகை பக்கம் திரும்பி உள்ளது. சந்தை சார்ந்த விவசாயத்தில் ( MARKET BASED AGRICULTURE) ஈடுபட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சந்தையில் அதிக தேவையும், நல்ல விளைச்சல் மற்றும் நல்ல விலையும் கிடைக்கும் பொருள் எது என அலசி ஆராய்ந்து அதற்கேற்ப சாகுபடி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர் விவசாயிகள். இந்த பட்டியலில் தற்போது இடம்பெற்றுள்ளது அத்தி மர சாகுபடி. அந்த வகையில் அத்தி மரத்தின் வரலாற்று சிறப்பு, அவற்றில் உள்ள சாகுபடி தொழில்நுட்பங்கள், மர வகைகள் என அத்தி மரம் குறித்து பல்வேறு தகவல்களை வேளாண் ஆலோசகர் அக்ரி சு. சந்திரசேகரன் கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-
அத்தியின் வரலாற்று சிறப்புகள்:
அத்தி என்றால் நம்முடைய மனதிற்கு வருபவர் காஞ்சிபுரத்து அத்தி வரதர். இதைபற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டாங்க. அதுபோல பல திருக்கோவில்களில் ஸ்தல மரமாகவும், ஜோதிடத்தில் சுக்கிரனின் அம்சமாகவும் விளங்கு கூடியதாக பண்டைய வரலாறு தெரிவிக்கிறது.சங்க இலக்கியங்களில் “அதவம்" என்றும் இம்மரத்தை அழைக்கின்றனர்
அத்தி மரத்தின் தனித்தன்மை: அத்தி மரம் பூத்து காய்க்கும் இதனுடைய பூக்கள் மற்ற மரங்களை போல வெளிப்படையாக தெரியாது. இதனை வெளிப்படுத்தும் விதமாக தமிழில் "அத்தி பூத்தாற் போல" புகழ்பெற்ற பழமொழி ஒன்றும் உள்ளது.
அத்தி மர சாகுபடி: அத்தியை ஆங்கிலத்தில் (FICUS) என்று அழைக்கப்படுகின்றன. இது பால் வடியும் மரம் என்பதால் மழை கொண்டுவரும் என்றும் நம்பப்பட்டது.
முன்பெல்லாம் ஆற்றங்கரை குளக்கரையில் காணப்பட்ட அத்தி மரங்கள் இன்றைய காலக்கட்டத்தில் மரத்திற்கும், பெரிய புதர் செடிக்கும் இடைப்பட்ட நிலையில் சீமை அத்தி செடிகள் காணப்படுகிறது.
அத்தி மர வகைகள்:
அத்தியில் பல வகைகள் உண்டு. நாட்டு அத்தி, நல்ல அத்தி , வெள்ளை அத்தி சீமை அத்தி என்ற வகைகளோடு தற்போது டிம்லா அத்தி, ஆப்கான் அத்தி இஸ்ரேல் அத்தி,பூனா அத்தி ,டயனா அத்தி என்ற பல ரகங்களும் உண்டு. தற்போது அதிகமாக "டர்க்கி பிரவுன்" என்ற ரகம் அதிகமாக தென்மாவட்டங்களில் சாகுபடி செய்ய படுகின்றன.
சாகுபடி தொழில்நுட்பங்கள்:
- மற்ற பழ மரங்களை போலத்தான் இதற்கும், மரத்திற்கு மரம் 10அடி இடைவெளியில் நடவேண்டும். நடுவு குழியில் மக்கிய சாண உரம் உயிர் உரகலவை இட்டு செடிகளை நட வேண்டும்.
- தேவையான செடிகளை மாநில தோட்டக்கலைத்துறை வாயிலாகவும் தனியார் நர்சரியிலும் பெறலாம். மரங்களை நட்டால் காய்ப்புக்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
- புதிய ரகமான ( டர்க்கிபிரவுன் ) போன்ற வகைகளை நட்டால் செடி நட்ட 4 மாதத்திலே பிஞ்சு பிடிக்க தொடங்கும்.அந்த பிஞ்சை உதிர்த்து விட வேண்டும். 8 மாதத்தில் இருந்து பிஞ்சுகளை காய்க்க விடலாம்.10-வது மாதத்திலே காய்ப்பு படிப்படியாக அதிகரிக்கும்.
- ஆண்டு ஒரு முறை கண்டிப்பாக கவாத்து செய்ய வேண்டும் கவாத்து செய்வதால் அதிகமாக பக்க கிளைகள் உருவாகுவதுடன் மரம் நேராக உயரமாக வளராது.
Read also: PM kisan- ஜன.15 வரை விவசாயிகளுக்கு ஒரு வாய்ப்பு!
- பலா மரத்தை போல மரத்தண்டிலேயே அத்திக்காய்கள் காய்க்கும். காய்கள் கிளையிலும் தண்டிலும் அடிமரத்திலும் காய்க்கும். மற்ற பழமரங்களுடன் ஒப்பிடுகையில் அத்தி மரத்தில் பூச்சி / நோய் தாக்குதல் குறைவு.
- ஒரு மரத்தில் இருந்தே சாரசரியாக 40-50 கிலோ வரை பழங்களை பறிக்கலாம். நன்றாக பழுத்த பழங்கள் கீழே தானாக உதிர்ந்துவிடும்.
நிலையான வருமானம் கிடைக்கும் என்பதால் அத்தி மர சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு நல்லத்தேர்வாக இருக்கும் எனலாம், என அருப்புக்கோட்டையினை சேர்ந்த வேளாண் ஆலோசகர் கிரிஷி ஜாக்ரானுடன் பகிர்ந்துள்ள தகவல்களில் குறிப்பிட்டுள்ளார்.
(மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள்/ முரண்கள் இருப்பின் வேளாண் ஆலோசகர் அக்ரி.சு சந்திர சேகரன் அவர்களை தொடர்புக்கொள்ளலாம். தொடர்பு எண்: 9443570289)
Read more:
சைலண்ட் ஜெனரேட்டர்- தமிழகத்தில் ரூ.500 கோடி முதலீடு செய்யும் TAFE