கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஈரோட்டில் மஞ்சள் விலை (Tumeric) குவிண்டாலுக்கு ரூ.8,000த்தைத் தாண்டியிருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி (Farmers Happy) அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் சத்தியமூர்த்தி கூறுகையில்,
தேவை அதிகரிப்பு (Increase in demand)
மஞ்சள் ஏற்றுமதி அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் அதன் தேவையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோட்டில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.8,000த்தைக் கடந்துள்ளதால், மஞ்சள் இருப்பு வைத்திருக்கும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
விற்பனையான விலை (Selling price)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.6,455 முதல் ரூ.8,269வரை விலைபோனது.ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.6,029 முதல் ரூ.8,264 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.5,529 முதல் ரூ.7,574 வரையும் விற்பனையானது.
அதேநேரத்தில், கர்நாடகாவில் புது மஞ்சள் வரத்தாகி உள்ளது. ஈரோடு பகுதியிலும் குறைந் அளவே மஞ்சள் வரத்தொடங்கிவிட்டது. இந்த வரத்திற்கு ஏற்ப விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி இல்லாததால் இறால் விலை கடும் வீழ்ச்சி!
காங்கேயத்தில் நாளை கால்நடைத் திருவிழா!
பம்ப் செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்- முதல்வர் அறிவிப்பு!