1. செய்திகள்

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி இல்லாததால் இறால் விலை கடும் வீழ்ச்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Shrimp prices fall sharply due to non-export
Good returns Tamil

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம் பட்டினம் கடல் பகுதியில் வெளி நாட்டு ஏற்றுமதி இல்லாததால் ஃப்ளவர் இறால் (Shrimp) விலை மிகவும் குறைந்து உள்ளது.

சமீப காலங்களாகவே அதிராம்பட்டினம் கடல்பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால் கடலில் மீன் இனப்பெருக்கத்திற்கு காரணமாக உள்ள கடல் தாவரங்கள், பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் உள்ளிட்டவைகள் அழிந்து விடுகின்றன. இதனால் கடலில் மீன்வரத்து முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது, கடுமையாக குறைந்துள்ளது.

எனவே இப்பகுதியில் உள்ள மீனவர்கள் மட்டுமல்லாமல் கடல் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுவரும் ஏராளமானவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப் பட்டுள்ளது.

இறால் உற்பத்தி அதிகம் (Shrimp production is high)

பொதுவாகவே தஞ்சை மாவட்ட கடல் பகுதியில்அலையாத்திக்காடுகள் உள்ளதால் இறால் உற்பத்தி மற்றும் நண்டு உற்பத்தி அதிகம் இருக்கும். இதில் இறால்களில், ஒயிட் இறால், டைகர் இறால், கருப்பு இறால், ப்ளவர் இறால், தாழை இறால் என ஐந்து வகை இறால்களும் அதிகம் கிடைக்கும்.

இறால் ஏற்றுமதி (Shrimp Exports)

இங்குள்ள இறால்கள் உணவுக்கு ஏற்றவகையில் நல்ல ருசியாக இருக்கும் என்பதால் இப்பகுதியில் உள்ள இறால் மீன்களுக்கு அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் தேவை உள்ளது. எனவே தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் இறால் ஏற்றுமதியாளர்கள் முகாமிட்டு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கடல் பகுதியில் இறால்களின் அதிக அளவே வரத்து வந்ததாலும், வெளிநாடுக்கு ஏற்றுமதி இல்லாததால் இறால் மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இறால் வகைகளில் ஒயிட் இறால் எனப்படும் வெள்ளை இறாலைத் தான் வியாபாரிகள் முதல் ரகமாக வைத்து அதாவது ஒரு இறால் குறைந்தது 30 கிராமிலிருந்து 50 கிராம் வரை உள்ள சைஸ்களை முன் பெல்லாம் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 550 வீதம் வாங்குவார்கள். மற்ற இறால்களுக்கு வெள்ளை இறாலை விட குறைந்த விலைதான் கிடைக்கும்.

ரூ.600க்கு விற்பனை (Selling for Rs.600)

இந்நிலையில் தற்போது வெள்ளை இறால்கள் வரத்தே இல்லாததால், அதற்கு அடுத்த ரகமான ப்ளவர் இறால்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 600 வரை விலை நிர்ணயம் செய்து வாங்கி வந்தனர்.

இந்நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இல்லாததால் தற்போது ரூபாய் 350க்கு விற்பனையாகிறது. இதனால் முன்பு கொடுகட்டிப்பறந்த இறால் ஏற்றுமதியும் தற்போது மந்தமான நிலையில் உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

நெல் தரிசில் பயறு வகை சாகுபடியை அதிகரிக்கும் சிறந்த வழிகள்!

பயிர்களில் நன்மை செய்யும் பூச்சிகளை உற்பத்தி செய்வது எப்படி?

60 ரூபாயில் மாதம் 5,000 பென்சன் திட்டம்!

English Summary: Shrimp prices fall sharply due to non-export Published on: 10 February 2021, 11:49 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.