விவசாயம் செய்வதற்கு விதை நெல் மிகவும் முக்கியமானது. விதைநெல்நல்ல தரத்தில் இருப்பதும் அவசியம். இன்றைய சூழலில், தரமான விதை நெல் கிடைப்பது சற்று கடினமாகத் தான் இருக்கிறது. இருப்பினும், தூங்கா நகரம் மதுரையில் உள்ள உழவர் உற்பத்தியாளர் குழு ஒன்று, தரமான விதை நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
விதை நெல் விற்பனை (Paddy Seed Sales)
மதுரை மாவட்டம் கருமாத்துாரில், தென்னை மற்றும் இதரப் பயிர்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக வேளாண்மை விற்பனை வணிகத்துறை நிதியுதவியுடன் ரூ.60 லட்சம் மதிப்பில் விதை சுத்திகரிப்பு நிலையம் துவங்கியுள்ளனர்.
இந்தாண்டு உறுப்பினர்கள் வயல்களில் நெல் விதைப்பண்ணை அமைத்து நெல் விதைகள் சேகரித்து அரசின் விதை தரக்கட்டுப்பாடு சான்றிதழ் பெற்று விற்கின்றனர். சங்கத்தைச் சேர்ந்த முத்துபேயாண்டி கூறியதாவது: வயல்களில் விதைப்பண்ணை அமைத்து வேளாண் துறை உதவியுடன் கண்காணித்து விளைந்த நெல்லை சுத்திகரிப்பு செய்து விதைகள் சேகரிக்கப்படுகின்றன.
விதைகள் முளைப்புத் திறன் சோதனைக்கு உட்படுத்தி சான்று பெற்ற பின்பு விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். இதுவரை 12 டன் சேகரித்துள்ளோம். வரும் காலங்களில் நெல் மட்டுமல்லாது பிற தானியங்கள், பயறு வகை விதைகள் சேகரித்து விற்பனைக்கு கொண்டு வர உள்ளோம் என்றார்.
மேலும் விபரங்களுக்கு
94422 58444
மேலும் படிக்க
4 நாட்களில் விவசாயிகளுக்கு அடங்கல் சான்றிதழ்: அமைச்சர் அறிவிப்பு!
தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!