பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த நாட்டில், வீடு வாங்குவோரிடம் இருந்து, பணத்திற்கு பதிலாக தர்பூசணிப் பழங்களைப் பெற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சீனாவில், சொத்து சந்தையில் ஏற்பட்டிருக்கும் அதல பாதாள சரிவு மக்களுக்கு வீடு வாங்கும் ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத நிலையில், வேறு வழியில்லாமல், தர்பூசணிகள் மற்றும் பிற விவசாய பொருட்களின் வடிவில் வீடுகளுக்கு பணம் வாங்கப்படுவதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
பணம் பெற தடை
சீனாவில் வீடு விற்பனை தொடர்ந்து 11 மாதங்களாக கிடுகிடுவென சரிந்து வருகிறது. ஒரு கட்டுமானம் திட்டம் தொடங்கும் முன் பில்டர்கள் பணத்தை டெபாசிட் தொகையாக வாங்க அரசு தடை விதித்தது.
தர்பூசணி
இதனால், சீனாவின் கிழக்கு நகரமான நான்ஜிங்கில் உள்ள ஒரு டெவலப்பர் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து 100,000 யுவான் வரை மதிப்புள்ள தர்பூசணிகளை பெற்றுக்கொள்வதாக அரசு தெரிவித்துள்ளது.
மகிழ்ச்சி
மற்றொரு டெவலப்பர் பீச் பழங்கள் மற்றும் பிற விவசாயப் பொருட்களை வீட்டுக்கான தொகையைக்கு ஏற்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க...
மரத்தடி வைத்தியரிடம் சிகிச்சை எடுத்துவரும் தோனி!
ஆடிப்பட்டத்தில் காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு- TNAU கணிப்பு!