
வியாபாரம் என்பது ஆண்டுமுழுவதும் நமக்கு கைகொடுப்பதாக இருக்க வேண்டும். அதிலும் மற்றவர்களின் ஆரோக்கியத்திற்கு, உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் வகையிலானத் தொழில் செய்ய முன்வருபவரா நீங்கள்? அப்படியானால் இந்த தொழில் உங்களுக்குதான்.
சிறந்த தேர்வு (The best choice)
கவர்ச்சிகரமான லாபம் ஈட்ட, முருங்கையைத் தேர்வு செய்யலாம். விளைவிப்பதும் எளிது. மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றி விற்பனை செய்வதும் சற்றே எளிமையான விஷயம்தான்.
விவசாயத்தில் நீங்கள் சுலபமாக ஒரு ஸ்டார்ட் அப் (Start -Up ) ஆரம்பிக்க வேண்டுமென்றால் தாராளமாக நீங்கள் முருங்கையை தேர்வு செய்யலாம்.
மருத்துவ குணம் நிறைந்தது (Full of medicinal properties)
கீரை வகைகள் பொறுத்தவரை எல்லாமே சத்து மிகுந்ததுதான். ஆரோக்கியமானது என்பதுடன், மருத்துவக்குணமும் கொண்ட கீரை என்றால், அது முருங்கை மட்டும்தான்.
கீரைகள் (Greens)
விவசாயிடமும் சரி மக்களிடையேயும் சரி, அதிக வரவேற்பு பெற்றதும் முருங்கிக்கீரைதான். கீரை வகைகள் என்று பொதுவாக எடுத்துக்கொண்டால், ஒரு போகத்திற்கு மட்டும் பலன் தரக்கூடிய அரைக்கீரை முளைக்கீரை உள்ளன. சில கீரைகள் நாம் வெட்ட வெட்ட முளைக்க கூடியது உதாரணமாக பொன்னகன்னி கீரையைச் சொல்லலாம்.
ஆனால் மேல் சொன்ன இந்த இரண்டு வகை கீரைகளில் இலை மட்டுமே பிரதான விற்பனை அல்லது சாப்பிடும் பொருளாக இருக்கும். ஆனால் முருங்கை எடுத்துக்கொண்டால் பல வருடம் பலன்தரக்கூடியதாகவும், இலை, காய் மற்றும் பூக்களும் விதைகளும் கூட விற்பனை பொருளாக இருக்கும்.
எனவே அன்றாட விற்பனையுடன், முருங்கையை மதிப்பு கூட்டுப் பொருட்களாகவும் மாற்றி எளிதில் விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டலாம்.
முருங்கை இலைப்பொடி (Drumstick leaf powder)
காய் மற்றும் பூக்களை விட அதிகம் சத்து நிறைந்தது முருங்கை இலைகள்தான். இவற்றில் கரோட்டின் சத்து அதிகம் நிறைந்து இருப்பதால் கண் குறைபாடு உள்ளவர்களுக்கு நல்லது.
இதன் இலைகளை அரைத்து புண்களுக்கும் போடப்படுகிறது. இதன் இலைகளில் சாறு எடுத்து ஜூஸ் ஆக விற்கலாம்.
முருங்கை விதை (Drumstick seed)
விதைகள் சத்து நிறைந்ததாக உள்ளன. இதையும் பொடியாக மாற்றி விற்கலாம். முருங்கை விதை தேவை படுபவர்களுக்கு நேரடியாகயும் விற்கலாம். முருங்கை விதையில் பென் ஆயில் என்கிற எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. விதையில் 30 முதல் 35% எண்ணெய் இருக்கிறது. இது உயவு எண்ணையாக பயன்படுத்தப்படுகிறது. அழகுசாதனப்பொருட்களுக் துணை பொருளாகபயன்படுத்தப்படுகிறது.
முருங்கை காயைய் ஊறுகாய் (Drumstick pickle)
முருங்கைக்காயைப் பயன்படுத்தி ஊறுகாய் தயாரித்தும் விற்பனை செய்யலாம்.
முருங்கைக்காய் வத்தல்
PKM - 2 ரக முருங்கைக்காயில், விதை குறைவாக இருந்து சதைப்பற்று அதிகமாக இருக்கும். அதில் முருங்கைக்காய் வற்றல் தயாரிக்கலாம். குறிப்பாக முருங்கைக்காய் வரத்து அதிகமாகி விலை வீழ்ச்சி அடையும் போது மதிப்பு கூட்டி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.
மேலும் படிக்க...
குறைந்த முதலீட்டில் மெகா லாபம் தரும் மலர் வியாபாரம்!
பூக்காதச் செடிகளையும் பூக்கவைக்கும், ஆரஞ்சு தோல் பூச்சிக்கொல்லி!