Farm Info

Monday, 11 July 2022 04:55 PM , by: Deiva Bindhiya

Welfare Scheme for Cultivation in Barren Lands: Apply Today!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற மாபெரும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த மே 23ந்தேதி அன்று தொடக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கிராமங்களில் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சி மற்றும் தன்னிறைவை அடைந்திட வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் உழவர் நலன் சார்ந்த பிற துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து, இத்திட்டம் செயல்ப்படுத்தப்பட்டு வருகிறது.

கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடவும் வேளாண்மையில் மகசூல் பெருக்கம் அடைந்திடவும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படுத்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் செயல்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் தொலைநோக்கு திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, தொகுப்பு தரிசு நிலங்களில் நீர் ஆதாரம் உருவாக்கப்பட்டு சாகுபடிக்கு உகந்த நிலங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தொகுப்பு தரிசு நிலங்களில் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்தி, மண் மற்றும் நீரின் தன்மைக்கேற்ற குறைந்த நீர் தேவையுடைய பலன் தரக்கூடிய பயிர்கள் சாகுபடி செய்திட திட்டத்தில் வழிவகை செய்துள்ளது.

தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து 15 ஏக்கர் தரிசு நிலத் தொகுப்பினை ஏற்படுத்தி குழுவாக சாகுபடிக்கு கொண்டு வருவதற்கு கைபேசியிஸ் உழவன் செயலியிஸ் தாங்களாகவே பதிவு செய்திட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Kalakshetra அறக்கட்டளை ஆட்சேர்ப்பு 2022: சம்பளம் 1லட்சம்!

அவ்வாறு பதிவேற்றம் செய்த விபரங்களை துறை அலுவலர்கள் தொகுப்பு தரிசு நிலத்தினை நேரில் பார்வையிட்டு சரிபார்த்த பின்பு நிலத்தடி நீர் ஆய்வு மேற்கொண்டு ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைத்துக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பார்கள். ஆகவே, இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி தரிசு நிலமுடைய விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து பயனடைந்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் இத்துறையின் நலத்திட்டங்களில் பயனடைய விவசாயிகள் https://www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/scheme_register என்ற இணையதள் முகவரயில் பதிவு செய்து இணைந்திடலாம். மேலும் கூடுதல் தகவலுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
(குறிப்பு: இத்தகவலை மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

மேலும் படிக்க:

News: 4 நாட்களில் விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்க: அமைச்சர் அறிவிப்பு

குறுவை தொகுப்பு திட்டத்திற்கு முழு மானியத்துடன் உரம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)