Farm Info

Wednesday, 16 December 2020 10:18 AM , by: Elavarse Sivakumar

Credit : The Hindu

புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களைக் (Paddy) காப்பாற்றும் வழிமுறைகளை வேளாண் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தஞ்சை மவாட்டம், பேராவூரணி வேளாண் உதவி இயக்ககம் எஸ்.மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  • புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால், இளம்பயிர்கள் முதல் அறுவடை செய்யும் நிலையிலுள்ள பயிர்கள் வரை நீரில் மூழ்கியுள்ளது.

  • விவசாயிகள் உடனடியாக நீரை வடித்து, பயிரைக் காப்பாற்ற வழிவகை செய்ய வேண்டும்

  • பயிர் கரைந்த நிலையில் உள்ளதற்கும், மஞ்சள் நிறமாக மாறி இருப்பதற்கும் உரிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்தால் மகசூல் (Harvesting)  இழப்பின்றி விவசாயிகள் பயன்பெற முடியும்.

  • அதிக நாட்கள் நீரில் இருந்த தாக்கத்தால் தழைச்சத்து குறைபாடு ஏற்பட்டு, இலைகள் மற்றும் தண்டுகள் இள மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

பயிர்களைக் காப்பாற்றும் மருந்து (Crop protection drug)

  • இதற்கு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர், ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் (Zinc Sulpate)மற்றும் 2 கிலோ யூரியா கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழியாக தெளிக்க வேண்டும்

  • தண்ணீர் தேக்கத்தினால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்பட்டால், தண்ணீர் வடிந்தவுடன் ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன் ஜிப்சம் 18 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 4 கிலோவை சேர்த்து ஒரு நாள் இரவு கலந்து வைக்கவும்.

  • மறுநாள் 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமிட வேண்டும். ஒரு கிலோ சூடோமோனாஸ் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்திட வேண்டும்.

  • தண்டு உருளும் மற்றும் பூக்கும் பருவத்திலுள்ள பயிர்களுக்கு 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் ஊரவைத்து, மறுநாள் வடிகட்டி கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ பொட்டாஷ் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

  • இவ்வாறு தெளிக்கும் பட்சத்தில் மகசூல் இழப்பிலிருந்து பயிரை பாதுகாத்திடலாம்.நன்மை செய்யும் பூச்சிகள் அதிகரிக்கும்.

  • இலை சுருட்டப்புழு, தண்டுத் துளைப்பான், புகையான் போன்ற பூச்சிக்களை கட்டுப்படுத்த, வரப்பில் மஞ்சள் நிற மலர் செடிகளை நடவு செய்வதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகள் அதிகரித்து தீமை செய்யும் பூச்சிகளை அழித்துவிடும்.

  • பூச்சி நோய்த் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் இருக்கும் பட்சத்தில், வேம்பு சார்ந்த மருந்துகளை உபயோகப்படுத்தி கட்டுப்படுத்துவது சாத்தியம்.

  • இரட்டை வால் குருவி அமருவதற்கு ஏதுவாக, வயலில் 15 முதல் 20 பறவை குடில்கள் அமைப்பதன் மூலம் இலைகருட்டுப் புழுக்களை முழவதுமாக கட்டுப் படுத்தலாம்.

  • கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

விவசாயிகளே! பாரம்பரிய நெல் இரகங்களை பயிரிடுவோம்! மீட்டெடுப்போம்!

பயறு வகைகளில் விதை நேர்த்தி! மகசூலை அதிகரிக்கும் வழிகள்!

புஞ்சை நிலத்தை செழிப்பாக்க பண்ணைக் குட்டைகளை அமைப்போம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)