மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 June, 2022 9:12 AM IST
Fertilizer shortage

உலகளவில் வேதியுரத் தட்டுப்பாடு தீவிரமடைந்து வருகிறது. இந்தத் தட்டுப்பாடு ரஷ்யா-உக்ரைன் போரால் மட்டும் விளைந்த ஒன்றல்ல, தற்காலிகமானதும் அல்ல. இன்னும் பல காலத்துக்கு நீடிக்கக்கூடிய, நம் அடிப்படைத் தேவையான உணவுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வளர்ந்துவரும் பூதம் இது. பசுமைப் புரட்சியின்போது செயற்கை உரங்களின் பயன்பாட்டை இந்தியா பெரிய அளவில் ஊக்குவித்தது. வேதியுரம் இடப்படும் பயிர்களுக்கு அதிக நீர் தேவைப்படும். இதனால் நீர்ப் பற்றாக்குறை மோசமடைந்தது. வேதியுரங்களின் பயன்பாட்டால், இயற்கை உரம்/எரு போன்றவற்றின் பயன்பாடும் சரிந்ததால் மண்ணில் கரிமக் கார்பன் குறைந்து, நுண்ணுயிரிகளும் குறைந்தன.

இயற்கை சார்ந்த, நிலைத்த வேளாண் வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது. நஞ்சில்லா உணவு மட்டுமில்லாமல், இறக்குமதி சாரா, இயற்கை சார்ந்த வேளாண் வழிமுறைகளுக்கான நேரமும் கூட.

மத்திய அரசு செய்ய வேண்டியவை (Things the federal government has to do)

  • மானியங்கள் - அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான வேதியுரத்திற்கான கொள்கைகளை அறிவித்து, உர நிறுவனங்கள் திட்டமிட்டு செயல்பட உதவ வேண்டும்.
  • இறக்குமதி - வெளியுறவு அமைச்சகம் எதிர்கால சூழ்நிலையைக் கையாள்வதற்கான திட்டத்தை (contingency) உருவாக்கி, வெளிநாடுகளிலிருந்து தேவையான உரத்தைப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.
  • கள்ளச்சந்தையையும், விலையேற்றத்திற்காக பதுக்குதல் போன்றவற்றையும் தடுக்க வேண்டும்.
  • உர மானியத்தை நிறுவனத்துக்குத் தராமல், நேரடியாக விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக அறிவிக்க வேண்டும்
  • அரிசி, கோதுமை ஆகியவற்றைத் தாண்டி சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளையும் அரசின் கொள்முதலில் சேர்க்க வேண்டும். இதனால் நீர், உரத் தேவை, இறக்குமதி செய்யப்படும் உரம், தானியத்தின் தேவை ஆகியவை குறையும்.
  • இயற்கை வேளாண்மைக்கான ஆய்வுகள், ஆலோசனைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
  • மரபார்ந்த இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க ஊக்கத்தொகை வழங்க வேண்டும்

தமிழக அரசு செய்ய வேண்டியவை (Things the Tamilnadu government has to do)

  • நுண்ணுரங்கள் தயாரிக்கும் மைக்ரோ கம்போஸ்டிங் மையங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். இதனால் நகரங்களில் இருக்கும் குப்பைகளை அகற்ற முடியும், விவசாயிகளுக்கு இடுபொருளும் கிடைக்கும்.
  • மகளிர் சுயஉதவிக் குழுக்களை விவசாயிகளுடன் இணைக்க வேண்டும்; சத்தீஸ்கரில் நடத்தப்படுவது போல், தரத்தில் கவனத்துடன் மண்புழு உரம் தயாரிக்க சுயஉதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.
  • விவசாயிகளுக்கு நேரடி மானியமாக பணத்தைக் கொடுத்து தங்கள் விருப்பப்படி இடுபொருள்களுக்குப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நேரடி பணப் பரிமாற்ற முறையைப் பயன்படுத்த வேண்டும்.
  • இயற்கை வேளாண்மை/இடுபொருள் உற்பத்தி/உபயோக‌த் திறனை வளர்க்க மாவட்ட அளவிலான நிபுணர்களை உருவாக்க வேண்டும்.

மேலும் படிக்க

தானியங்கி மயமாகும் நீர்ப்பாசனம்: செழிக்கும் விவசாயம்!

மதுரையில் முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலம்: அமைச்சர் தகவல்!

English Summary: What can be done to deal with shortage of fertilizer?
Published on: 29 June 2022, 09:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now