1. விவசாய தகவல்கள்

தானியங்கி மயமாகும் நீர்ப்பாசனம்: செழிக்கும் விவசாயம்!

R. Balakrishnan
R. Balakrishnan
Automated Irrigation

நம் நாட்டில், விவசாயத்திற்கு, ஆண்டுக்கு 20,000 கோடி யூனிட் மின்சாரம் செலவாகிறது; இது, நாட்டின் ஒட்டுமொத்த மின் செலவில், 18 சதவீதம். இன்று, வேளாண் துறையின் பிரதானப் பிரச்னைகளில் ஒன்று, முறையான நீர்ப்பாசனம்; முறையாக மின்சாரம் கிடைக்காததால் நீர்ப்பாசனத்தில் பல தடங்கல்கள் இருக்கின்றன.

நீர்ப்பாசனம் (Irrigation)

நாட்டின் 140 கோடி மக்கள் தொகையில் 60 சதவீதம்; நாட்டின் பொருளாதாரத்தில் 17 சதவீதம் பங்களிக்கும் பொறுப்பு விவசாயத்தை சார்ந்துள்ளது. விவசாயத்திற்கு அத்தியாவசியத் தேவை யாதெனில், சரியான நேரத்தில் போதுமான தண்ணீர்; மின்சாரம். இருபது சதவீத விவசாயிகள் பாசனத்திற்காக மின் பம்ப்செட்களை நம்பியுள்ளனர்.

மின்சாரம் (Electricity)

மின்வெட்டுடன் நம்பகத்தன்மையற்ற மின்சாரம் விவசாயிகளின் செயல்பாட்டுத் திறனைக் குறைத்துள்ளது. விவசாயத்திற்கான விநியோகம் நாள் முழுவதும் சில மணி நேரங்களுக்கு மட்டுமே. எப்போது மின்சாரம் வரும் என்று விவசாயிகள் விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது. மின் விநியோகம், மீண்டும் தொடங்கிய பிறகு உடனடியாக தங்கள் சாதனங்களை இயக்க வேண்டிய அவசியம் முதன்மை முக்கியத்துவம் பெறுகிறது. இதன் விளைவாக உற்பத்தித்திறன் குறைதல், உழைப்பு விரயம், உபகரணங்கள் செயலிழத்தல் போன்றவை நடக்கின்றன.

மின் விநியோகம் மீண்டும் தொடங்கும் போது கருவிகளை இயக்குவதற்கு ஒரு தொழிலாளியை நியமிப்பது கட்டாயமாகிறது.

நீர்ப்பாசனத்திற்கு ஒரு மடங்கு மின்சாரம் செலவழிக்க வேண்டும் என்றால், நாம் பயன்படுத்துவதோ 1.6 முதல் இரண்டு மடங்கு வரை அதிகம் செலவழித்து வருகிறோம். இதற்கு காரணம், மோட்டார் இயக்குவதற்கான சுவிட்ச்களை தேவையான நேரத்தில் அணைக்காதது தான். மின் செலவு அதிகரிப்பு, நீர் விரயம் ஏற்படுகின்றன.

பம்ப்செட்கள் விரயமாக ஓடுவதற்கு வீட்டிற்கும், வயல்வெளிகளுக்கும் இடையே உள்ள துாரமும் முக்கிய காரணம்.மின் மற்றும் நீர் விரயம் தவிர்க்க, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. முறையற்ற மின் வினியோகம், பாசன நீர் சிக்கல்களை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு, ஜலபிரயா ஆட்டோடெக், பம்ப் கன்ட்ரோலர் பண்ணை பாசனத்தை தானியங்கி மயமாக்கியுள்ளது.

தானியங்கி (Automatic)

இந்த 'ஸ்டார்ட் அப்' நிறுவனம், காப்புரிமை பெற்ற, 'இன்டர்நெட் ஆப் திங்க்ஸ்' தொழில்நுட்பத்தில், விவசாயி வீட்டில் இருந்து இயக்கும் வகையிலான பம்ப் கன்ட்ரோலரை உருவாக்கியுள்ளது. மனித தலையீடு இல்லாமல், இதன் துல்லிய செயல்பாடு விவசாயிக்கு நிம்மதியைத் தருகிறது; பயிர் மகசூல் மற்றும் தரத்தை அதிகரிக்கிறது; நிலத்தடி நீர் பயன்பாட்டை மேம்படுத்துகிறது; மண்ணைப் பாதுகாக்கும் போது கார்பன் தடத்தை குறைக்கிறது.

இந்த கன்ட்ரோலர் எந்த வகை மற்றும் அளவிலும் உள்ளே மோட்டார்களில் பொருத்தும் திறன் கொண்டது. இந்திய வேளாண்மையில் 2.9 கோடி பம்ப்செட்கள் நடைமுறையில் இருக்கின்றன. இந்தியாவின் பம்ப்செட் தொழில்துறை ஆண்டுக்கு ஏழு முதல் எட்டு சதவீதம் வரை உயர்ந்து செல்கிறது.

மேலும் படிக்க

குப்பையில் இருந்து உரம்: விழிப்புணர்வு ஏற்படுத்த மக்களுக்கு செயல் விளக்கம்!

தொடர்மழையால் கண்மாய்கள் நிரம்பியது: மகிழ்ச்சியில் விவசாயிகள்!

English Summary: Automated Irrigation: Prosperous Agriculture! Published on: 27 June 2022, 02:31 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.