மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 March, 2021 4:19 PM IST
Credit : Agrospectrum

எந்த வியாபாரம் செய்தாலும், நிதிச்சுமை ஏற்படும் காலங்களில் அதனை சமாளிக்க கடன் வாங்குவது என்பது கட்டாயமாகிறது. அந்த வகையில், விவசாயிகளின் நிதித்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் கடனுக்கான வட்டித்தொகை வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது.

இதில் முக்கியப் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான SBIயில் விவசாயக் கடன்களுக்கு எவ்வளவு வட்டி வசூலிக்கப்படுகிறது என்பதைப்பிற்றி பார்ப்போம்?

sbi யின் பயிர்க்கடன் (crop loan of sbi)

இது விவசாயிகளுக்கு கடன் அட்டை மூலம் கொடுக்கக்கூடிய கடன்களில் ஒன்று. இந்த வகை கடனில் 3 லட்சம் வரை உள்ள கடனுக்கு 7% வட்டி விதிக்கப்படுகிறது . மூணு லட்சத்துக்கு மேல் கடன் வாங்கினால், நீங்கள் பணத்தை திரும்ப செலுத்தும் கால அளவை பொறுத்து வட்டி விகிதம் மாறுபடும்.

இந்த பயிர்கடனில் மூனு லட்சத்துக்குள் கடன் வாங்குபவர்களுக்கு 2 சதவீத வட்டியை அரசாங்கமே செலுத்தும்.

விவசாய நகை கடன் (Agricultural jewelry loan)

விவசாயிகளுக்கு உடனடியாக கிடைக்க கூடிய கடன்களில் ஒன்று இது. வட்டி விகிதம் வருடத்திற்கு 7.5% மாகும். 3 லட்சத்திற்கு மேல் வட்டி விகிதம் மாறுபடும்

ட்ராக்டர் கடன் (Tractor loan)

SBI வங்கியில் ட்ராக்டர்களுக்கு நான்கு விதமான கடன்கள் வழங்கப்படுகின்றன.

1. Stree Shakti Tractor Loan(Mortgage free)
இந்த கடனுக்கு ஒரு வருடத்திற்கு 11.50%


2. Stree Shakti Tractor Loan-Liquid Collateral
இந்த கடனுக்கு ஒரு வருடத்திற்கு  10.95%

3. Modified New Tractor Loan Scheme
ஒரு வருடத்திற்கு இந்த கடனுக்கு10.30%

4. தட்கல் டிராக்டர் கடன் (Tatkal Tractor Loan)

மார்ஜின் 25% - ஒருவருட 10.25% ஒருவருடத்திற்கு
மார்ஜின் 40% - ஒருவருட 10.10 %ஒருவருடத்திற்கு
மார்ஜின் 50% - ஒருவருட 10.00 % ஒருவருடத்திற்கு

அறுவடைக் கடன்  (Harvest credit)

அறுவடை மற்றும் அறுவடை பின்சார் தொழில் நுட்பத்திற்கான கடன் 3.50 % ஒருவருடத்திற்கு வழங்கப்படுகிறது.

நீர் பாசனக் கடன் வசதி (Irrigation loan facility)

ட்ரிப் (Drip) பாசன வசதி அரசாங்கத்தில் 100 % மானியத்தில் செய்து தரப்படுகிறது . இதைத் தவிர்த்து பாசன வசதி கடன் மூலமும் பெறலாம். அதற்கு MCLR 7%+ Spread 3.60% சேர்த்து வருடத்திற்கு 10.60 வட்டி விகிதமாகும்.

பால் பண்ணை கடன் (Dairy farm loan)

ஒரு பால் பண்ணை அமைக்க அல்லது அதற்கான வாகனங்கள் வாங்க, குளிர் சாதன வசதி செய்ய இந்த வகை கடன் கொடுக்கப்படுகிறது. இதற்கு MCLR 7%+ Spread 3.60% சேர்த்து வருடத்திற்கு 10.60 வட்டி விகிதமாகும்

கோழி பண்ணை கடன்  (Poultry farm loan)

கோழி பண்ணை அமைக்கவும், அதற்கான கூடாரங்கள் அமைக்கவும், அது சார்ந்த உபகரணங்கள் வாங்குவதற்கும் இந்த கடன் கொடுக்கப்படுகிறது. அதற்கு MCLR 7%+ Spread 3.60% சேர்த்து வருடத்திற்கு 10.60 வட்டி விகிதமாகும்

மீன் பண்ணை கடன் (Fish farm loan)

மீன் வலை , மற்றும் உபகரணங்கள் , மீன் குஞ்சுகள் வாங்க இந்த கடன் கொடுக்கப்படுகிறது. அதற்கு MCLR 7%+ Spread 3.60% சேர்த்து வருடத்திற்கு 10.60 வட்டி விகிதமாகும்.

மேலும் படிக்க...

சந்தையில் விற்பனையாகும் போலி இஞ்சி- கண்டுபிடிக்க எளிய டிப்ஸ்!

Post Office கணக்கு வைத்திருப்பவர்களா நீங்கள்? உங்களுக்கு அடுத்த மாதம் அதிர்ச்சி காத்திருக்கு!

4,500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல்- தேர்தல் கண்காணிப்புக் குழு அதிரடி!

English Summary: What is the interest rate on agricultural loans at SBI Bank? - Details inside!
Published on: 04 March 2021, 04:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now