1. செய்திகள்

Post Office கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? உங்களுக்கு அடுத்த மாதம் அதிர்ச்சி காத்திருக்கு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Are you a Post Office account holder? Shock awaits you next month!

Credit : Apnaplan.com

அஞ்சல் அலுவலகங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள், பணத்தை திரும்பப் பெறுவதற்கு இனிமேல் கட்டணம் செலுத்த வேண்டியதுக் கட்டாயமாக்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது.

அடுத்த மாதம் முதல் கட்டணம் (First payment next month)

இந்திய கிராம மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள், பணத்தைத் திரும்பசெலுத்துவதற்கு, அடுத்த மாதம் முதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்தப் புதிய கட்டணங்கள் 2021 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும். கணக்கு வகைக்கு ஏற்ப கட்டணங்களும் வேறுபட்டவை.

கட்டணம் இல்லை (There is no charge)

அடிப்படை சேமிப்புக் கணக்கில் கட்டணம் ஒரு மாதத்திற்கு 4 முறை பணத்தை திரும்பப் பெறுவதற்கு எந்தக் கட்டணமும் இல்லை.

ரூ.25 கட்டணம் (Fee of Rs.25)

ஆனால் அதற்குப் பிறகு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 25 ரூபாய் அல்லது திரும்பப் பெறப்பட்ட மொத்த தொகையில் 0.50 சதவீதம் வசூலிக்கப்படும்.

இருப்பினும், பணத்தை டெபாசிட் (Deposit) செய்யும் போது நீங்கள் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் விரும்பும் வழியில் பண வைப்பு பெறலாம்.

Savings Account மற்றும் Current Account இல் கட்டணம்

அடிப்படை சேமிப்புக் கணக்கைத் தவிர, உங்களிடம் சேமிப்புக் கணக்கு அல்லது நடப்புக் கணக்கு இருந்தால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ .25,000 திரும்பப் பெறலாம், அதுவரை கட்டணம் ஏதும் இருக்காது, அதன் பிறகு ஒவ்வொரு முறை திரும்பப் பெறும் தொகைக்கு குறைந்தபட்சம் ரூ .25 அல்லது 0.50 சதவீதம் வசூலிக்கப்படும்.

நீங்கள் ஒரு மாதத்தில் ரூ .10,000 வரை ரொக்க வைப்பு செய்தால், கட்டணம் ஏதும் இருக்காது, இதற்குப் பிறகு, ஒவ்வொரு டெபாசிட்டிலும் குறைந்தபட்சம் ரூ .25 வசூலிக்கப்படும் அல்லது மொத்த மதிப்பில் 0.50 சதவீதம் வசூலிக்கப்படும்.

AePS கணக்கிலும் கட்டணம் (Fees on AePS account as well)

நீங்கள் ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறையிலும் கட்டணம் (Aadhaar Enabled Payment System) செலுத்த வேண்டும். IPPB (India Post Payment Banks) நெட்வொர்க்கில் வரம்பற்ற பரிவர்த்தனைகள் முற்றிலும் இலவசம். IPPBஅல்லாத நெட்வொர்க்குகளில் ஒரு மாதத்திற்கு மூன்று பரிவர்த்தனைகள் இலவசம்.

மேலும் படிக்க...

4,500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல்- தேர்தல் கண்காணிப்புக் குழு அதிரடி!

இயற்கை விவசாயம் செய்ய மானியம்-விண்ணப்பிக்க அழைப்பு!

சரிந்தது சின்ன வெங்காயத்தின் விலை -மேலும் குறைய வாய்ப்பு!

English Summary: Are you a Post Office account holder? Shock awaits you next month!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.