மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 February, 2021 1:52 PM IST
Credit : Healthline

மக்காச்சோளத்திற்கு இந்த முறை என்ன விலை கிடைக்கும்? என்பதை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

வேளானர் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2020-2021 ஆம் ஆண்டில் மக்காச்சோளமானது இந்தியளவில் கிட்டத்தட்ட 93.00 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 198.80 இலட்சம் டன் உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் (Tamil Nadu)

தமிழ்நாட்டில் பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.
நீடித்த வடகிழக்கு பருவமழையால், படைப்புழுவின் தாக்கம் குறைத்தாலும், பயிர் சாய்தல் மற்றும் நோய் தாக்கத்தின் காரணமாகவும், மக்காச்சோள மகசூல் குறைந்து காணப்படுகிறது.

விலை அதிகரிக்க வாய்ப்பு (Possibility to increase prices)

கோடைகால மக்காச்சோள விதைப்பு பரப்பளவைத் தீர்மானிக்கும். மேலும் அர்ஜென்டினா உலக சந்தைக்கு மக்காச்சோள ஏற்றுமதியை நிறுத்தியதாலும், அமெரிக்காவின் ஏற்றுமதியானது பிரேசிலின் தேவையை பூர்த்தி செய்யவுள்ளதாலும், மக்காச்சோளத்தின் விலை அதிகரிக்கும்.

பறவைக்காய்ச்சலால் பாதிப்பு (Infection with bird flu)

இருப்பினும் இந்தியாவில் முக்கியமாக மக்காச்சோளம் விளையும் மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட பறவை காய்ச்சல் காரணமாக மக்காச்சோளத்தின் விலை தற்காலிகமாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டம், கடந்த 27 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு நடத்தியது.

விலை (Price)

இதன்படி, தரமான மக்காச்சோளத்தின் சந்தை விலையானது மார்ச் 2020-21ல் குவிண்டாலுக்கு ரூ.1,500 முதல் ரூ.1,600 ஆக இருக்கும்.

எனவே இதன் அடிப்படையில் விவசாயிகள் சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

கூடுதல் விவரங்களுக்கு

தொடர்பு கொள்ளவும்

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்,
வேளாண் மற்றும் ஊரக மேட்பாட்டு ஆய்வு மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயமுத்தூர் 641 003
தொலைபேசி 0422 2411406

தொழில்நுட்ப விவரங்களுக்கு

போர்சிரியர் மற்றும் தலைவர்
சிறுதானியத் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

மேலும் படிக்க...

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி இல்லாததால் இறால் விலை கடும் வீழ்ச்சி!

சூரிய மின்வேலி அமைக்க 50% மானியம் பெற விண்ணப்பிக்கலாம்!

வட்டி இல்லாதக் கடன்- இந்த ஆப்-பில் உடனே கிடைக்கும்!

English Summary: What price will corn get this time - TNAU forecast!
Published on: 10 February 2021, 01:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now