Farm Info

Sunday, 27 November 2022 05:32 PM , by: Poonguzhali R

When is PM-Kisan 13th installment releasing?

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 13ஆவது தவணையில் 2000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. வருகின்ற டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் விவசாயிகள் வங்கிக்கணக்கில் விடுவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்பது மத்திய அரசால் வழங்கப்படும் விவசாயிகளுக்கான திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய்  மூன்று தவணையாக ரூ.2000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க: TNEB: 100 யூனிட் இலவச மின்சாரம்! வெளியான புதிய அறிவிப்பு!!

ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என ஒரு ஆண்டில் மொத்தம் 3 தவணைகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 12 தவணைகள் வழங்கப்பட்டன. அடுத்து 13ஆவது தவணை எப்போது கிடைக்கும் என்று விவசாயிகள் இருக்கின்றனர். அடுத்த தவணைப் பணம் விரைவில் வர இருக்கிறது.

உண்மையில், இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டின் முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை என்ற காலத்திலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரை என்ற காலத்திலும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மூன்றாவது தவணைக்கான பணம் டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படலாம். அந்த நிலையில் பிஎம் கிசான் திட்டத்தின் 13வது தவணை டிசம்பர் மாதத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: TNEB: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்! மின்சாரத்துறை அமைச்சர் தகவல்!!

எனவே 13-வது தவணை டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க

சென்னையில் ஜவுளி நகரம், மகாபலிபுரத்தில் அருங்காட்சியகம்: ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சாய்வுதளம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)