டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன் மத்திய அரசு வரும் செவ்வாய் கிழமை பேச்சுவார்த்தை (Negotiation) நடத்துகிறது. இந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்க விவசாயி சங்கங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் பஞ்சாப் (Punjab) மற்றும் ஹரியானா (Hariyana) மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். டெல்லிக்குள் செல்ல அனுமதிக்காததால், அவர்கள் டிக்ரி- பஹதுர்கார் எல்லையில் இருந்தபடியே தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
இந்த போராட்டம் 30 நாட்களுக்கும் மேலாகத் தொடரும் நிலையில், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு ஏற்கனவே நடத்திய பலகட்டப் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இதனைத்தொடர்ந்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், வரும் 29ம் தேதி செவ்வாய் கிழமை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பங்கேற்க விவசாய சங்கங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இதனால், போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடவு செய்த விவசாயிகள் (Farmers who planted)
டெல்லி புராரி மைதானத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் ஒரு குழுவினர், தங்கள் தேவைக்கு அந்த மைதானத்திலேயே வெங்காய சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக மைதானத்தின் ஒரு பகுதியில், வெங்காய நாற்றுகளை நடவு செய்துள்ளனர். அதற்குத் தேவையான தண்ணீரைத் தெளிக்கின்றனர். ஒரு மாத காலமாக விவசாயம் செய்யாமல் இருப்பதால், தங்களது சமையல் தேவைக்காக மைதானத்தில் வெங்காய சாகுபடி செய்திருப்பதாகவும், மேலும் சில பயிர்களைப் பயிரிடத் திட்டமிட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் 2 பேர் மரணம் (2 more Died)
இதனிடையே போராட்டக்களத்தில், கடந்த 24 மணி நேரத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் கைதால் மாவட்டத்தைச் சேர்ந்த இரு விவசாயிகள் மாரடைப்பால் மரணமடைந்தார்கள். ஏற்கனவே கடுங்குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
விவசாயிகளே வந்துவிட்டது எலக்ட்ரிக் டிராக்டர்- விலை ரூ.5.99 லட்சம்தான் !
வறுமையை ஒழித்துக் கிராமங்களை வளமாக்கும் MGNREGA!!
மத்திய அரசு வழங்கும் சூரிய மித்ரா பயிற்சி-தங்குமிடம், உணவு இலவசம்!