பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 September, 2021 11:15 AM IST
World Coconut Day

தேங்காயின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதன் வரலாறு மற்றும் அதன் உற்பத்திக்கு செல்லும் அனைத்தையும் பற்றி நாம் அறிந்திருக்கமாட்டோம்.

செப்டம்பர் 2 ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சங்கத்தால் (APCC) உலக தேங்காய் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் தலைமையகம் உள்ளது. செப்டம்பர் 2 ஏபிசிசியின் நிறுவன நாளாகும். இந்தியா உட்பட அனைத்து முக்கிய தென்னை வளரும் நாடுகளும் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் இந்த நாளை ஏன் உலக தேங்காய் தினமாக கொண்டாட முடிவு செய்தது?

தென்னை விவசாயிகள்

உலக தேங்காய் தினம் என்பது தேங்காய் மட்டுமல்ல, அவற்றை உற்பத்தி செய்யும் மக்களுக்கும் பொருந்தும். தென்னை சாகுபடியாளர்களாக இருக்கும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றி டெஹ்ரிந்து கொள்ள வேண்டும். ஏபிசிசியின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளில் உள்ள விவசாயிகள் வறுமை மற்றும் பல சவால்களை அனுபவிக்கின்றனர். இந்தியாவிலேயே, அவர்கள் சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்கின்றனர். வெட்டுக்கிளி தாக்குதல்களும் அவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களின் பயிர்களுக்கு குறைந்தபட்ச விலையைப் பெறுவது பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது.

அதிக விநியோகம், குறைவான தேவை

தேங்காய் தொழிற்துறையின் பிரச்சனைகளில் ஒன்று, தேவையை விட பல மடங்கு சப்ளை ஆகும். சமீபத்திய ஆண்டுகளில் தேங்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இருப்பினும் போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். நாம் நிச்சயமாக நம் உணவிலும் வாழ்க்கையிலும் தேங்காயை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

தென்னை தொழில்: உயர் மற்றும் தாழ்வு

தேங்காய் தொழில் மெதுவாகவும் சீராகவும் வளர்ந்து வருகிறது. அதை ஊக்குவிப்பது என்பது மற்ற பல விஷயங்களைக் குறிக்கும் மற்றும் இவற்றில் சிறு பண்ணை வைத்திருப்பவர்களை ஊக்குவித்தல் மற்றும் அதிக முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை அடங்கும். தேங்காய் தொழிற்துறையின் வளர்ச்சி என்பது அதனுடன் தொடர்புடைய அனைவரின் வளர்ச்சியையும் குறிக்கிறது. இது வறுமையை விட்டு வெளியேற பல குடும்பங்களுக்கு உதவும்.

உலக தேங்காய் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

உலக தேங்காய் தினம் முதன்முறையாக 2009 இல் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர், ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள், நிபுணர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஒரு சந்தர்ப்பம் இது. சர்வதேச அளவில் தேங்காய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். தென்னை பற்றிய விழிப்புணர்வு அதிகரிப்பதால் விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு சரியான விலையைப் பெறவும், விநியோகத்திற்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளியை அகற்றவும் உதவும். இது தென்னை தொழில் வளர்ச்சிக்கு உதவும்.

இந்த தேங்காய் தினத்தில் நாம் அனைவரும் தேங்காய் பற்றி தெரிந்து கொள்ளவும், அதனுடன் ஒரு சுவையான உணவை சமைக்கவும், உடலையும் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வோம்.

மேலும் படிக்க..

தென்னையில் அதிக மகசூல் பெற, எப்போது எவ்வளவு உரம் இட வேண்டும்?

English Summary: World Coconut Day: Hands on coconut trees
Published on: 02 September 2021, 11:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now