You can make a profit of lakhs of rupees by making wood from dung!
இந்தியா கிராமங்களின் நாடு. அதே சமயம், இங்குள்ள 80 சதவிகித மக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள், விவசாயம் மட்டுமே அவர்களின் வேலைவாய்ப்பு. ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் கால்நடைகள் உள்ளன, அதனை குடும்ப உறுப்பினர்களில் ஒருவரைப் போலவே வளர்க்கிறார்கள்.கால்நடைகளிலிருந்து பால் கறந்து தங்கள் வீட்டு தேவைக்கு எடுத்துக்கொண்டு மீதம் உள்ள பாலை அக்கம்பக்கத்தினருக்கு கொடுத்துவிடுவர்.
ஆனால் கால்நடைகளிலிருந்து கிடைக்கும் மாட்டுச் சாணத்தை காயவைத்து எரிப்பார்கள். சில இடங்களில் உணவு தயாரிப்பதற்கு சமையலறையில் காய்ந்த மாட்டு சாணத்தை எடுத்து எரிபொருளாக பயன்படுத்துவார்கள். அதே போன்று மாட்டுச் சாணத்திலிருந்தும் உரம் தயாரிக்கப்படுகிறது, இது பயிர்களுக்கு மிகவும் ஏற்றது.
நம் நாட்டில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கை 192.49 மில்லியன்ஆகும். இவ்வளவு கால்நடைகள் இருந்தும் கூட விவசாயிகள் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
கால்நடை வளர்ப்பு மட்டுமே இதை சாத்தியமாக்குகிறது, இதில் பால் மற்றும் மாட்டு சாணம் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து பல வகையான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இப்போது பூஜை பொருட்களான தூபக் குச்சிகளும் மாட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன.உண்மையில் மாடுகள் நம் தாயைப் போல மனிதர்களைக் கவனித்துக்கொள்கின்றன. அதனால்தான் இந்து மதத்தில் மாடு தாயாக மட்டுமே கருதப்படுகிறது.
கால மாற்றத்துடன், மனிதனின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. இந்துக்களில், ஒரு இறந்த உடலை எரிப்பதற்கு கூட காய வைத்த மாட்டின் சாணம் பயன்படுத்தப்படுகிறது. மாட்டு சாணத்தை வைத்து மரக்கட்டைகள் செய்யப்பட்டது. சமீபத்தில், கொரோனா தொற்றுநோயில், தகனம் செய்யும் இடத்தில் இடம் மற்றும் மரத்திற்கு பஞ்சம் ஏற்பட்டது. மாட்டுச் சாணம் சமையலறையில் ஒரு வரையறுக்கப்பட்ட ஏரிபொருளாக இருந்தது, மேலும் தற்போது மாட்டுச் சாணம் சுடுகாட்டில் இறந்த உடலை எரிப்பதற்கு ஒரு புதிய பொருளாக மாறியது.
மாட்டு சாணத்தை வைத்து மரக்கட்டைகள் எப்படி தயாரிப்பது என்று காணலாம், சர்தார் சுக்தேவ் சிங் என்பவரை சந்தித்தபோது, அவர் ஒரு இயந்திரத்தை தயார் செய்தார், அதில் மாட்டு சாணத்தில் இருந்து மரம் தயாரிக்கப்படுகிறது.
சர்தார் சுக்தேவ் சிங் உத்தரபிரதேசத்தின் மவானாவில் உள்ள மீரட்டில் வசிக்கிறார், இப்போது அவருக்கு 67 வயது மற்றும் அவரிடம் பொறியியலாளர் பட்டம் இல்லாவிட்டாலும் இயந்திரத்தின் பல மாதிரிகளை உருவாக்கியுள்ளார்.
மாட்டுச் சாணத்திலிருந்து மரம் தயாரிக்கும் மாடல் சாதாரண மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. மாட்டு சாணத்திலிருந்து செய்யப்படும் இந்த மரத்தின் விலை மிகவும் குறைவு.
தற்போது கிராமப்புறங்களில் கால்நடைகளின் சாணம் திடீரென மிகவும் மதிப்புமிக்கதாக மாறியது. பசுவின் சாணத்திலிருந்து மரத்தைக் கேட்பது விசித்திரமாகத் தோன்றுகிறது, ஆனால் அது உண்மைதான்.
மேலும் படிக்க...
மீன் வளர்ப்பிற்கு மாட்டு சாணம் மற்றும் கோமியம்! நம்பமுடியாத வளர்ச்சி!