பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 26 July, 2023 11:49 AM IST
1 lakh subsidy for Organic Agriculture Input Manufacturing Centre

2023-2024 ஆம் ஆண்டு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், இயற்கை வேளாண் இடுபொருள் தயாரித்தல் மையம் நிறுவ ரூ.1 இலட்சம் மானியம் வழங்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தியையும், விவசாயிகளின் நிகர வருமானத்தையும் அதிகரித்திட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதனைப்போன்று மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் போன்றவற்றின் மூலமும் விவசாயிகளின் நலனில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மூலம் 2023-2024 ஆம் ஆண்டில் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், மண்புழு உரம், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், அமிர்தகரைசல், மீன் அமிலம் போன்ற இயற்கை வேளாண்மை இடுபொருட்கள் தயாரித்து, விற்பனை செய்திட இயற்கை வேளாண்மை இடுபொருள் மையம் நிறுவ, ஆர்வமுள்ள உழவர் குழுக்களுக்கு மானிய உதவியாக குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வீதம் 3 குழுக்களுக்கு ரூ.3 இலட்சம் மானியம் வழங்கப்படவுள்ளது.

சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகள் அடங்கிய குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும். குழுவினர் தங்களது இயற்கை வேளாண் இடுபொருட்களின் உற்பத்தி அலகினை ஒரு செயல் விளக்க அலகாகப் பராமரிக்க அனுமதிக்க வேண்டும். இது தொடர்பான உறுதிமொழிப் பத்திரம் பயனாளிகளிடம் பெற்றுக் கொள்ளப்படும்.

தேர்வு செய்யப்பட்ட பின் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழுக்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு உற்பத்தியைத் தொடர வேண்டும். மானியம் பெறும் குழு திட்டக் கூறுகளை செயல்படுத்தும் போதும், செயல்படுத்திய பின்பும் புகைப்பட ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

திட்டத்தில் பயன்பெற விரும்பும் குழுக்கள் முழு முகவரியுடன் குழுவின் பெயர், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, குழுவின் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் விரிவான திட்ட அறிக்கையினை (Detailed Project Report) வருகிற ஆகஸ்ட் 10-க்குள் சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே, விருப்பமுள்ள குழுக்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டுமென நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அரசின் நலத்திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, தொப்பம்பட்டி ஊராட்சியில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 15 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் உமா வழங்கினார்.

pic courtesy: nursery live

மேலும் காண்க:

தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயம்- மதுரை மார்கெட் நிலவரம்

கஷ்டமே இல்லாம மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய சூப்பர் சான்ஸ்

English Summary: 1 lakh subsidy for Organic Agriculture Input Manufacturing Centre
Published on: 26 July 2023, 11:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now