அரசு விவசாயிகளுக்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் கால்நடை வளர்ப்புக்கு என பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது. கால்நடை வளர்ப்பில் குறிப்பிடத்தக்க வகையாக கோழி வளர்ப்பு இருக்கின்றது.
தற்போது உள்ள சூழலில் இறைச்சி அதிக அளவில் விற்கப்பட்டு வருகிறது. இறைச்சிக்கான தேவையும் அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் கோழி வளர்ப்பில் ஈடுபட்டால் அதிக லாபத்தினைப் பெறலாம். அதிலும் குறிப்பாக நாட்டுக் கோழி என்றால் அதிக அளவில் விற்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் படிக்க: ஆடு வளர்க்க ரூ. 4 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம்!!
எனவே, அரசு தரும் மானியத்தினைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக லாபம் பெறும் நாட்டுக்கோழி வளர்ப்பை மேற்கொள்ளலாம். இந்த நிலையில் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம் 2021 குறித்துதான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம்.
மேலும் படிக்க: நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது! அரசுக்குக் கோரிக்கை!!
நாட்டுக் கோழிப் பண்ணை அமைக்க 25% மானியத்தினை தமிழக அரசு வழங்குகிறது. அடுத்த 25% மானியமானது, நபார்டு வங்கியின் சார்பில் மானியமாக வழங்கப்படுகிறது. ஆக, 50% மானியம் அரசு சார்பாகவே வழங்கப்படுகிறது. மீதமுள்ள 50% தொகையை வங்கியில் கடனாகப் பெற்றுக் கொண்டு பண்ணைகளை அமைக்கலாம் என்பது கூடுதல் நன்மை.
மேலும் படிக்க: அதிக மகசூல் தரும் பாலைவனப் பயிரான பேரீச்சை வளர்ப்பு!
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- விவசாயிகள், தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள் அல்லது தனிநபர் இந்த மானியத்தைப் பெறலாம்.
- கோழிப் பண்ணை அமைக்கும் அளவிற்குப் போதிய நிலம் உள்ள அனைவரும் இம்மானியத்திற்குத் தகுதி உடையவர்கள் ஆவர்.
தேவையான சான்றுகள்
- ஆதார் கார்டு
- வங்கி கணக்குப் புத்தகம்
- குடும்ப அட்டை
- 100 நாள் வேலைவாய்ப்பு அட்டை
- நில உரிமை பத்திரம்
- குடியிருப்புச் சான்று
- சாதிச் சான்று
- புகைப்படம் 2
மேலும் படிக்க: ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்: அஞ்சல் துறை
எவ்வாறு விண்ணப்பிப்பது?
தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வங்கியிலிருந்து ஒரு ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றைப் பெற வேண்டும். அதன் பின், அஇந்த திட்டத்துக்கான விண்ணப்பங்களைப் பெற்றுப் பூர்த்திச் செய்து கொடுக்க வேண்டும்.
மேலும் படிக்க: இனி விவசாயிகள் ஏரி குளங்களில் மண் எடுக்கலாம்! தமிழக அரசு உத்தரவு!
கோழிப் பண்ணைக் குறித்த முன் அனுபவம் பெறாமல் இருந்தாலும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு உள்ள புதிய விண்ணப்பதாரர்களுக்கு அவரவர் மாவட்டங்களில் உள்ள பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மீன்வளப் பல்கலைக்கழகத்தில் சேர வேண்டுமா? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
இந்த மானியம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. அதோடு, அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
சிறுபான்மையினருக்கு மானியம்! செஞ்சி மஸ்தான் அறிவிப்பு!
ஓய்வூதியர்களுக்குச் அடுத்த மகிழ்ச்சியான செய்தி! சூப்பர் வசதி!