மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 November, 2020 12:18 PM IST
Credit : Farmers.live

உழவர் உற்பத்தி அமைப்புகள் வங்கிக்கடன் பெறுவதில் உள்ள சிக்கலைத் தீர்க்கும் வகையில், அரசே உத்திரவாதம் அளித்துக் கடன் பெற்றுத்தர முன்வந்துள்ளது..

விவாசயிகளை ஒன்றிணைத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளாக உருவாக்கி, அவர்களை வேளாண் சாகுபடி மட்டுமல்லாது, வேளாண் வணிகத்திலும் மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு (Farmer Production Organisation) கடன் வசதி அளித்து தொழில் துவங்க இடைநிலை மூலதன உதவி கடன் உத்தரவாதம் மற்றும் சலுகையுடன் கூடிய சுழல் நிதி வழங்கும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுவாக உழவர் சங்க உற்பத்தியாளர் அமைப்புகள் கடன் வேண்டி வங்கிகளை அணுகும்போது, அடமானம் கோருவதுடன் வங்கியில் வட்டி விகிதமும் அதிகமாக இருக்கும்.
இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு உற்பத்தியாளர் நிறுவனமும் ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கு ஏதுவாக,  வங்கிகள் மற்றும் நாப்கிசான் நிறுவனத்திற்கு 50 சதவீத உத்தராவதத்தை, தமிழ்நாடு அரசே வழங்குகிறது.

சலுகையுடன் கூடிய சுழல் நிதி

தற்போது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் போது இதர வணிக நடவடிக்கைகளுக்கு வழங்குவது போல் 12 முதல் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகதத்தை 8 முதல் 9 சதவீதமானக் குறைக்கும் வகையில் தமிழக அரசின் பங்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சலுகையுடன் கூடியக் கடன் வழங்கப்படுகிறது.

Credit : Civildaily

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை வலுப்படுத்தி, வணிகரீதியாக வளரும் வகையில் இத்திட்டத்தினை நான்கு ஆண்டுகளில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.266.1 கோடி ஒப்பளிப்பு செய்துள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்த வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் நாப்கிசான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 2020-ஆம் மாதத்தில் போடப்பட்டது

இத்திட்டத்தினை அரசு செயல்படுத்துவதால், உழவ உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடன் உத்திரவாதம் பெற்றிட நிதி நிறுவனங்களை ஊக்குவிக்கவும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மூலதன உதவி மற்றும் சலுகையுடன் கூடிய கடன் வழங்கவும் இயலும்.
மேலும் விவரங்களுக்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் மாவட்டத்தின் வேளாண்மை துணை இயக்குநரைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

குட்பை சொல்லும் குப்பைகள்- உரமாகும் அதிசயம்!

அங்கக வேளாண்மையில் பயிர்களின் காதலன் எது தெரியுமா?

உடல் சூடு பிரச்னை இவைகளுக்கும் உண்டு-தடுக்கும் வழிகள் !

English Summary: Bank loan with government guarantee for farmers - Action taken!
Published on: 11 November 2020, 12:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now