1. தோட்டக்கலை

அங்கக வேளாண்மையில் பயிர்களின் காதலன் எது தெரியுமா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Do you know the lover of crops in organic farming?

Credit: Dinamalar

பாதுகாப்பு என்பது மனிதருக்கு மட்டுமல்ல, பயிர்களுக்கும் மிக மிக அவசியம். அப்படியானால் தோட்டத்தை சுற்றி கம்பிவேலி அமைக்க வேண்டும் என நினைக்க வேண்டாம். இங்கு சொல்லவருவது உயிர்வேலி. அங்கக வேளாண்மையைப் பொருத்தவரை, பயிருக்கு உயிராக செயல்படும் உன்னத காதலன் உயிர்வேலி இதுதான்.

உயிர்வேலி எதற்கு? (Why a lifeline?)

உயிர் வேலி அமைப்பது பாதுகாப்பானது மட்டுமல்ல.செலவுகுறைந்தும், நிரந்தர மானதும்கூட. இவை சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பல்லுயிர் பெருக்கத்தின் பிறப்பிடமாகவும் திகழ்கின்றன. அதுமட்டுமல்ல,தற்சாரபு பொருளாதார வளர்ச்சி க்கு வழிவகுக்குகூடியது.

உயிர்வேலி தாவரங்கள் (Lifeline Plants)

பரம்பை முள் 
கிழுவை முள்
கள்ளி கத்தாலை
கொடுக்காபுளி
சவுக்கு
ஒத்தக்கள்ளி 
பனை மரம்
வெள் வேல் 
குடை வேல்
நொச்சி இலந்தை
முள் காகித பூ செடி
அகத்தி
முள்முருங்கை 
மலைக்கிழுவை 
ஆமணக்கு
பிரண்டை
முடக்கத்தான் 
நொச்சி 
கோவக்கொடி
பீர்க்கங்காய் 
பாகற்காய்

Credit : Agriwiki

பாதுகாப்பு அரண் (Protective Wall)

இவற்றை மழைக்காலங்களில் வரப்பு ஓரங்களில் நட்டு வைத்தால் எவ்வித பாரமரிப்பின்றி வேகமாக வளர்ந்து பாதுகாப்புஅரணாகவும், பயிருக்குக் பொருத்தமான காதலனாகவும் இருக்கும். இவை காற்றைத் தடுக்கும் தடுப்பாக இருக்கும். இதனால் நிலத்தில் உள்ள பயிர் கள் குறிப்பாக வாழை போன்ற பயிர்கள் காற்றினால் அதிக அளவில் சேதம் அடையக்கூடிய வை உயிர் வேலி யால் பாதுகாக்க படுகிறது.

உயிர்வேலியின் பயன்கள் (Benefits of lifeline)

  • மேலும் கடற்கரையில் ஓரங்களில் சவுக்கு நெருக்கமாக படுவதால் காற்றினால் மண் வாரிஇறைப்பது முற்றிலும் தடுக்கப்படுகிறது.

  • பல்லுயிர் களின்பெருக்கமாகவும், அதற்கு தேவையான வாழ்விடமாக அமையும்.

  • நமது நிலத்தை சுற்றி உயர் வேலி அமைக்கும் போதுபாம்பு தேள் போன்ற அஞ்சக்கூடிய உயிர் இனங்கள் அனைத்தும் நிலத்தில் தங்காமல் வேலியில் தங்கி பாதுகாப்பு வளையமாக செயல் படும்.

  • ஆந்தை, மயில்கள், குருவி, கரிச்சான் போன்ற பறவை இனங்கள் உயிர் வேலி யில்கூடு கட்டிதங்கி சிறு சரணாலயமாக செயல் பட வழி வகுக்கும்.

  • உயர்வேலி அமைத்தால் மண் அரிமானம் தடுக்கப்படும்.

  • ஆடு மாடுகளுக்கு தீவனமாக, வயலுக்கு பசுந்தாள் உரமாக பயன்படுகிறது.

  • மனிதர்கள் மற்றும் விலங்குகளிடமிருந்து நிலத்தில் உள்ள பயிரைக்கு பாதுகாப்பு அரணாக அமைந்து விடும்.

  • வருடத்திற்கு ஒருமுறை உயிர்வேலியாக வளர்க்கும் செடிகளைக் கவாத்து செய்து புதர் இல்லாமல் வைத்து கொள்ள வேண்டியதும் அவசியம்.

எனவே நமது நிலத்தை சுற்றி தற்போது பெய்து வரும் மழையைப் பயன் படுத்தி உயிர் வேலி அமைக்க முயற்சிப்போம்

தகவல்
அக்ரி சு.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289

மேலும் படிக்க...

ரூ.7 லட்சம் வரை லாபம் -கால்நடைவளர்ப்பு சார்ந்த உணவுத் தொழில்!

இதை செய்தால் போதும் - இலைச் சுருட்டுப் புழுக்கள் இல்லாமல் போகும்!!

பயிருக்கு தழைச்சத்து தரும் சூப்பர் அசைவ மருந்து!

English Summary: Do you know the lover of crops in organic farming?

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.