அறுவடைக்குப்பின் சந்தைபடுத்தும் காலம் வரை ஏற்படும் இழப்பினை குறைக்கவும், மற்றும் வேளாண் விளைபொருட்களை சேமித்து வைக்கும் காலத்தை நீட்டிக்கவும். வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்த முழுமையான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
அறுவடைக்குப்பின் சந்தைபடுத்தும் காலம் வரை ஏற்படும் இழப்பினை குறைப்பதையும், மற்றும் வேளாண் விளைபொருட்களை சேமித்து வைக்கும் காலத்தை நீட்டிப்பதையும் நோக்கமாகக் கொண்டு வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு, நிதி ஆதாரம், ஒன்றிய அரசால் 60% சதவீதமும், மாநில அரசால் 40% சதவீதமும் வழங்கப்படுகிறது.
மானியம் குறித்த விவரம்:
- வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வாங்குவதற்கு ஆகும் செலவில் அதிகபட்சமாக 40% அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
- ஆதி திராவிட பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
திட்டம் செயல்படும் பகுதி:
தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்கள்
செயல்படுத்தப்படும் திட்டம்:
கதிரடிக்கும் இயந்திரங்கள்
மேலும் படிக்க: மின் மோட்டர் பம்ப்செட் வாங்க ரூ.15,000 மானியம்! Enam திட்டம் குறித்து விழிப்புணர்வு| Tamil Agri News
தகுதி:
- தனிப்பட்ட விவசாயிகள்
- உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்
- சுய உதவிக்குழுக்கள், விவசாய பயன்பாட்டு குழுக்கள்
- தொழில் முனைவோர்கள்
விண்ணப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்கள்:
- ஆதார் அட்டையின் நகல்
- புகைப்படம்
- வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல்
- சாதிச் சான்றிதழின் நகல்
- சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ்
- நிலம் சம்பந்தமான சிட்டா மற்றும் அடங்கல்
- குழுவாக இருக்கும் பட்சத்தில் அதன் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் நகல்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறையில் அணுகி பயன்பெறலாம்.
எனவே, விவசாயிகளுக்கு கதிரடிக்கும் நேரத்தில் அதீத அளவு பொருள் நஷ்டம் ஏற்படுவதுண்டு, இதனை குறைக்க கதிரடிக்கும் இயந்திரம் பயனுள்ளதாக இருக்கும். அதே நேரம், இந்த இயந்திரத்திற்கான மானியம் 40% வழங்கப்படுவது விவசாயிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.
மேலும் படிக்க:
புதிதாக மின் மோட்டர் பம்ப்செட் வாங்க யாரை அணுக வேண்டும்?
2ஆம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பு!