1. மற்றவை

2ஆம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Notification of public examination for 2nd-level jail warden and fireman posts!

இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் இணையதள வாயிலாக வரவேற்கப்படுகிறது. மேலும் முழுமையான தகவலை பதிவில் காணுங்கள்.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) இரண்டாம் நிலை பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் இணையதள வாயிலாக வரவேற்கப்படுகிறது.

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

வயது: 01.07.2023 அன்று 47 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்

இப்பணியிடங்களில் முன்னாள் படைவீரர்களுக்கு 5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள் மேற்படி பணியிடங்களுக்கு www.tnursb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 17.09.2023க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவக்கப்படுகிறது.

மேலும் மேற்படி பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியது குறித்த முழுவிவரங்களை மேற்காணும் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பினை அறிந்து விண்ணப்பித்து பயனடையலாம்.

இத்தேர்வுக்கான முக்கிய தேதிகள்:

  • அறிவிக்கை தேதி 08.08.2023
  • இணைய வழி விண்ணப்பம் சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி 18.08.2023
  • இணைய வழி விண்ணப்பம் சமர்பிப்பதற்கான கடைசி தேதி 17.09.2023
  • எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி - பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் படிக்க: சின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பு| Chennai Gold Rate | PM kisan e-kyc Update

மொத்த காலிப்பணியிடங்கள்: 3359

குறிப்பு: முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு பயின்றிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வின் ஒவ்வொரு நிலையிலும் மொத்த காலிப் பணியிடங்களில் 20% முன்னுரிமை அளிக்கப்படும்.

தேர்வுக் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.250/- இணையதள வழி (இணையதள வங்கி/ வங்கி கடன் அட்டை/ வங்கி பற்று அட்டை/ UPI) மற்றும் இணையமில்லா வழியில் SBI வங்கியின் செலுத்துச் சீட்டு மூலம் SBI வங்கியின் அனைத்து கிளைகளிலும் அலுவல் நேரத்தில் செலுத்தலாம்.

இணையவழி விண்ணப்பம்: விண்ணப்பதரார்கள் இவ்வாரியத்தின் இணையதளமான www.tnusrb.tn.gov.in மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதர வழிகளில் விண்ணப்பித்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கு முன்னர், இவ்வாரிய இணையதளத்திலுள்ள தகவல் சிற்றேட்டினை படித்து அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க:

மக்களே, B.Ed பட்டப்படிப்பிற்கு சேர்க்கை தொடக்கம்: இன்றே விண்ணப்பிக்கவும்!

ஆழ்துளை கிணறு அமைக்க 50 விழுக்காடு மானியத்துடன் கடன் திட்டம்: பயன்பெற அழைப்பு!

English Summary: Notification of public examination for 2nd-level jail warden and fireman posts! Published on: 07 September 2023, 03:04 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.