பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 19 November, 2023 1:49 PM IST
coconut board

தென்னை வளர்ச்சி வாரியத்தின் 2023-24 வருடத்திற்கான, தென்னை சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டம், தென்னை நாற்றாங்கால் பண்ணை அமைத்தல், தென்னை மரம் ஏறும் தொழிலாளிகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களுக்கா விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர் செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தென்னை சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டம் : இத்திட்டத்தின் கீழ், தென்னை சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில், புதிய பகுதியில் தென்னை நாற்றுகளை நடுவதற்கு நிதியுதவி வழங்கபடுகிறது. இளங்கன்று சாகுபடி செய்யும் விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயனடைய முடியும். இத்திட்டத்திற்கான மானியத் தொகை ஒரு ஹெக்டேருக்கு (160 தென்னங்கன்று) ரூ.6,500/- நெட்டை ரகத்திற்கும், ரூ.6,750/- கலப்பின ரகத்திற்கும் மற்றும் ரூ.7,500/- குட்டை ரகத்திற்கும் சமமாக பிரித்து இத்தொகை இரண்டு தவணையாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.

மேற்குறிப்பிட்ட திட்த்தில் பயன்பெற விரும்பும் விவாசாயிகள் தென்னை வளர்ச்சி வாரிய இணையதளத்தில் விண்ணப்பங்களை (www.coconutboard.gov.in) பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, இணைப்புகளுடன் வேளாண் விரிவாக்க அலுவலகத்தில் சான்று பெற்று தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தென்னை நாற்றாங்கால் பண்ணை அமைத்தல்: இத்திட்டத்தின் மூலம், தரமான நாற்று உற்பத்தி செய்யும் விவசாயி அல்லது தனியார் துறை மற்றும் பிற நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், தென்னை நாற்றாங்கால் பண்ணை அமைப்பதற்கு, 25% மானியம் ஆண்டுக்கு 6,250 நாற்றுகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 0.10 ஹெக்டேருக்கு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல், ஆண்டுக்கு 25,000 நாற்றுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 0.40 ஹெக்டேருக்கு ரூ.2 லட்சம் வரை மானியம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

தென்னை மரம் ஏறும் தொழிலாளிகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: (KESRI)

தென்னை மரம் ஏறுபவர்கள் (CTC) / நீரா தொழில்நுட்ப தொழிலாளர்கள் / தேங்காய் அறுவடை செய்பவர்களுக்காக தென்னை மரம் ஏறும் தொழிலாளிகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம் தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் மொத்த ஆண்டு சந்தாவான ரூ.375/-ல், ரூ.94/- சந்தாவாக செலுத்தி மேலே குறிபிட்டவர்கள் பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இவ்வளவு வழி இருக்கா?

மீதமுள்ள சந்தா ரூ.281/- யை தென்னை வளர்ச்சி வாரியம் செலுத்திவிடும். இக்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயனடையும் நபருக்கு ஆயுள் தொகையாக ரூ 5.00 லட்சமும், விபத்து ஏற்பட்டு ஊனமுற்றவராக ஆகும் பட்சத்தில் ரூ. 2.50 லட்சமும், மருத்துவ செலவிற்கு ரூ. 1.00 லட்சம் வரை கிடைக்கப்பெறும்.

பயனாளி ரூ.94/- சந்தாவை/ வரைவோலை அல்லது NEFT/RTGS/UPI முறையில் செலுத்தலாம். இதற்கான விண்ணப்பங்கள் தென்னை வளர்ச்சி வாரிய இணையதளத்தில் (www.coconutboard.gov.in) பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, இணைப்புகளுடன் வேளாண் விரிவாக்க அலுவலர்கள் (வேளாண் உதவி இயக்குனர் அல்லது வேளாண்மை அலுவலர், ஊராட்சி தலைவர் அல்லது CPS/CPF/CPC தலைவரிடம் சான்று பெற்று தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதையும் காண்க:

அறுவடைத் தேதியே 15 நாட்களுக்கு முன்னரே தெரிவிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

PMFBY- விவசாயிகள் 72 மணி நேரத்திற்குள் தகவல் தெரிவிக்கலனா பிரச்சினையா?

English Summary: Good news for coconut farmers subsidy up to 2 lakhs
Published on: 19 November 2023, 01:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now