அறுவடைத் தேதியே 15 நாட்களுக்கு முன்னரே தெரிவிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Crop yield competition

தஞ்சை மாவட்ட விவசாயிகள் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் நடைப்பெற உள்ள பயிர் விளைச்சல் போட்டியில் அதிகளவில் பங்கேற்குமாறும், போட்டியில் பங்கேற்பவர்கள் அறுவடைத் தேதியே 15 நாட்களுக்கு முன்னரே தெரிவிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வேளாண் நிதிநிலை அறிக்கையில் மாநில அளவில் நெற்பயிர், சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, தினை, சாமை, குதிரைவாலி மற்றும் பயறு வகை பயிர்களான துவரை, உளுந்து, பச்சைப்பயறு எண்ணைய்வித்து பயிர்களான நிலக்கடலை, எள் சாகுபடி செய்து, அதிக மகசூல் எடுக்கும் முதல் மூன்று விவசாயிகளுக்கு ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் அறிவித்துள்ளார்கள்.

எனவே, மேற்கண்ட பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அதற்கான விண்ணப்பத்தினை தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்று ரூ.150 நுழைவு கட்டணம் செலுத்தி அதன் ரசீது, பயிரிடப்பட்டுள்ள பரப்பின் சான்றாக சிட்டா அடங்கல், நிலத்தின் வரைபடம், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை இணைத்து வேளாண்மை உதவி இயக்குநர் மூலமாக வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். சொந்த நிலம் வைத்திருப்பவர்கள் மற்றும் குத்தகைதாரர்களும் இப்போட்டியில் பங்குபெற தகுதியுடையவர்கள் ஆவர்.

அறுவடைத் தேதி:

சன்னரகம் பயிரிட்டுள்ள விவசாயிகள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். அறுவடை நிலத்தில் போட்டிக்கான விபரங்கள் அடங்கிய தகவல் பலகை வைக்க வேண்டும். குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னர் அறுவடை தேதியை முடிவு செய்து முன்னதாகவே வேளாண் இணை இயக்குநருக்கு தெரிவிக்க வேண்டும்.

மாநில அளவில் வேளாண் ஆணையரால் நியமிக்கப்பட்ட வேளாண் பிரதிநிதி மற்றும் பயிர் நடுவர்கள் முன்னிலையில் பயிர் விளைச்சல் போட்டி நடைபெறும். போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசு ரூ.2.50 இலட்சம், இரண்டாவது பரிசு ரூ.1.50 இலட்சம், மூன்றாவது பரிசாக ரூ.1 இலட்சம் வழங்கப்படும். மேலும், பரிசுபெறும் விவசாயிகளுக்கு டாக்டர்.நாராயணசாமி விருதும் அதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

பாரம்பரிய நெல் இரகங்கள்:

பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளும் மேற்காணும் வழிமுறைகளை பின்பற்றி மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். இதற்கான நுழைவு கட்டணம் ரூ.100/- ஆகும். போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசு ரூ.1 இலட்சம், இரண்டாவது பரிசு ரூ.75,000/-, மூன்றாவது பரிசாக ரூ.50,000/- வழங்கப்படும்.

மேலும் இவர்களுக்கு பாரத ரத்னா, டாக்டர் எம்.ஜி.ஆர் விருதும் அதற்கான சான்றிதழும் வழங்கப்படும். எனவே விவசாயிகள் அதிக அளவில் இப்போட்டியில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டி, செம்மை நெல் சாகுபடி மற்றும் உளுந்து பயிருக்கு நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் விவசாயிகளுக்கு நெற்பயிருக்கு முதல்பரிசு ரூ.15,000/-, இரண்டாவது பரிசு ரூ.10,000/- வழங்கப்படும். பயறுவகை பயிர்களுக்கு முதல்பரிசு ரூ.10,000/- இரண்டாவது பரிசு ரூ.5,000/- வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள தஞ்சை மாவட்ட விவசாயிகள் இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்கள்.

இதையும் காண்க:

வேகமெடுக்கும் மிதிலி புயல்- 5 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

PMFBY- விவசாயிகள் 72 மணி நேரத்திற்குள் தகவல் தெரிவிக்கலனா பிரச்சினையா?

English Summary: Instructions to farmers to notify harvest date 15 days in advance Published on: 17 November 2023, 06:11 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.