பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 January, 2024 3:12 PM IST
Agricultural input dealer

வேளாண் இடுப்பொருள் விற்பனையாளர்களுக்கு மானிய நிதியில் பட்டப்படிப்பு பயில கிடைத்துள்ள வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-

வேளாண் பயிர்சாகுபடிக்கு விதை, உரம், பூச்சுக்கொல்லிகள் போன்ற இடுப்பொருட்கள் இன்றியமையாததாகும். இவைகள் வேளாண்மைதுறை மற்றும் தனியார் இடுப்பொருள் விற்பனையாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில தனியார் இடுப்பொருள் விற்பனையாளர்கள் இடுப்பொருட்களை அனுபவத்தின் அடிப்படையில் வழங்கி வருகின்றனர்.

MANAGE: ஓராண்டு பட்டயப் படிப்பு

தேசிய வேளாண் மேலாண்மை விரிவாக்கப் பயிற்சி நிலையம் (MANAGE), ஹைதராபாத் 2003 ஆம் ஆண்டிலிருந்து வேளாண் இடுபொருட்கள் பற்றிய அடிப்படை அறிவை இடுபொருள் விற்பனையாளர்களுக்கு அளிக்கும் வகையில் வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டயப் படிப்பினை நடத்தி வருகிறது.

வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் இடுபொருள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் வேளாண் களம் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதில் முதன்மையாக விளங்குகின்றனர். பெரும்பாலான வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் வேளாண் சார்ந்த முறையான கல்வியினைப் பெற்றிருப்பதில்லை.

தற்போது மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலைகளால் புதுவிதமான பூச்சி மற்றும் நோய்கள் பயிர்களை தாக்குகின்றன. எனவே வேளாண்மையில் அவர்களது தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளுக்கு நல்ல முறையில் பயன்பெறும் வகையிலும், தேவையை அறிந்து தேவையான இடுபொருட்களை சரியான தருணங்களில் விவசாயிகளுக்கு வழங்கி வேளாண் விரிவாக்கப் பணியாளர்களுக்கு துணையாக விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர்களாக செயல் புரியவும் ஓராண்டு பட்டயப் படிப்பினை மேனேஜ் (MANAGE) நடத்தி வருகின்றது.

பட்டயப் படிப்பு- செயல்படும் முறை:

மாநில வேளாண்மை மேலாண்மை மற்றும் விரிவாக்கப் பயிற்சி நிலையம் (சமிதி) மூலம் வேளாண்மை ஆணையர், சென்னை அவர்களால் தேர்வு செய்யப்பட்ட இணைப்பு பயிற்சி நிலையங்கள் (Nodal Training Institute) வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திட்ட இயக்குநர் (அட்மா) வும் இணைப்பு பயிற்சி நிலையங்களாக வேளாண்மை ஆணையர், சென்னை அவர்களால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் படிப்பு சுயநிதி மூலமாகவும் (Self Finance) மத்திய அரசின் 50 சதவீத மானிய நிதியுடனும் நடத்தப்பட்டு வருகின்றது. குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும். தேர்ச்சி பெறுவது அவசியம் இல்லை.

கல்விக்கட்டணம் எவ்வளவு?

சுயநிதிமுறையில் படிப்பதாக இருந்தால் ரூ.20,000/-ம், மத்திய அரசின் 50 சதவீத மானிய நிதி மூலமாக பயில்வதாக இருந்தால் ரூ. 10,000/.

வேளாண் விற்பனை நிறுவனங்கள் மூலமாக படிப்பதாக இருந்தால் அந்நிறுவனம் ரூ.10,000/- ம், மீதமுள்ள ரூ.10,000/- மத்திய அரசு மற்றும் இடுபொருள் விற்பனையாளரும் தலா ரூ. 5000/- வீதம் படிப்புத் தொகையாக கட்ட வேண்டும்.

Read also: மல்லிகையில் ஊட்டச்சத்து பற்றாக்குறையா? இதை செய்தால் போதும்

வகுப்புகள் நடைப்பெறும் முறை:

இந்தப் படிப்பு, வாராந்திர வகுப்புகளாக அதாவது வாரந்தோறும் சனி (அ) ஞாயிறு (அ) விற்பனை விடுமுறை நாளன்று பெரும்பாலும் அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்படும். ஒரு அணிக்கு கட்டாயம் 40 நபர்கள் இருக்க வேண்டும். மொத்தம் 48 நாட்களில் 40 நாட்கள் (80 வகுப்பறை வகுப்புகளும்), 8 நாட்கள் கண்டுணர்வு வகுப்புகளும் நடத்தப்படும்.

மேற்கண்ட பட்டயப்படிப்பு சேர்வதற்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையம் அல்லது வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) அவர்களை தொடர்பு கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Read also:

மலட்டுத்தன்மை நோக்கி நகரும் மண் வளம்- என்ன செய்து காப்பாற்றலாம்?

மதி அங்காடி- அரசின் உதவியை பெற யாரெல்லாம் தகுதி?

English Summary: MANAGE offers course in subsidy to seed fertilizer and pesticide seller
Published on: 27 January 2024, 03:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now