மதி அங்காடி- அரசின் உதவியை பெற யாரெல்லாம் தகுதி?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
mathi angadi

திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு ஆண்டு செயல்திட்டத்தில் (2023 – 2024) 100 மதி அங்காடி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 முக்கிய பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய மதி எக்ஸ்பிரஸ் என்கிற வாகன அங்காடி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு 3 மதிஅங்காடி அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளது. இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைப்பதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரம் உறுதி செய்யப்படுகிறது.

பயனாளிகள் தேர்வு செய்யும் முறை மற்றும் விண்ணப்பங்கள் கீழ்க்கண்டவாறு தேர்வு செய்யப்படுகிறது.

 • சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும்
 • முன்னுரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட, விதவை மகளிர் மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத் திறனாளிகளாக இருக்க வேண்டும்.
 • மேற்கண்ட முன்னுரிமை தகுதியில் விண்ணப்பங்கள் ஏதும் பெறப்படவில்லை எனில் பொது மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
 • மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே விற்பனை வாகன அங்காடி வழங்கப்படும்.
 • தேர்வு செய்யப்படும் உறுப்பினர் உள்ள சிறப்பு சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
 • தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையதளத்தில் (NRLM portal) பதிவு பெற்றிருத்தல் அவசியம்.
 • பொருட்கள் உற்பத்தி/ விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவமுடையவராக இருத்தல் வேண்டும்.
 • சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஓர் ஆண்டிற்கு மேல் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
 • தேர்வு செய்யப்படும் உறுப்பினர் மீது எந்த வித புகார்களும் இல்லை என்பதையும் வங்கி மற்றும் சமுதாய அமைப்புகளில் வாரக்கடன் ஏதுமில்லை எனவும் சான்றிதழ் வழங்க வேண்டும்.
 • வாகன அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடமே இருக்கும்.
 • அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் பயனாளிக்கு வழங்கப்படும். வாகனத்தை விற்பனை செய்யவோ, வேறு நபருக்கு மாற்றவோ உரிமை இல்லை.
 • வாகன அங்காடி நடத்த இயலாத பட்சத்தில் மீண்டும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திற்கே ஒப்படைத்திட வேண்டும்.
 • விதிமுறைகள் மீறி செயல்படும் உறுப்பினரிடமிருந்து வாகன அங்காடியினை திரும்ப பெற்றுக்கொள்ள மாவட்ட திட்ட இயக்குர் மூலம் உரிய அறிவிப்பு ஆலோசனைகள் வழங்கி பறிமுதல் செய்ய மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திற்கு முழு அதிகாரம் உண்டு.
 • தொடர்ந்து ஒருவார காலத்திற்கு மேல் வாகனம் இயக்கப்படவில்லை எனில் வாகன அங்காடி பறிமுதல் செய்யப்படும். அங்காடிக்கு என வாடகை ஏதும் கிடையாது. பராமரிப்பு செலவினங்களை சம்பந்தப்பட்ட பயனாளியே மேற்கொள்ள வேண்டும், என்று தெரிவிக்கப்படுகிறது.

Read more: SSY சிறுசேமிப்புத் திட்டம்: பெண் குழந்தை வைத்திருப்பவர்களுக்கு குட்நியூஸ்!

மேற்காணும் விதிமுறைகளின்படி, தகுதியான நபர்களின் விண்ணப்பங்களை திட்டஇயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, திருவள்ளூர் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை தபால்கள் மூலமாகவோ அல்லது நேரிலோ 05.01.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 044-2766 4528 எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Read more: விவசாய நிலங்களில் வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட மண்- முதல்வர் சொன்ன குட்நியூஸ்!

English Summary: Eligible for government assistance to set up mathi angadi and mathi Express Published on: 31 December 2023, 02:39 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.