பெண்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டும் வருகின்றது. அந்த வகையில் பெண் ஓட்டுநர்களுக்கு அவர்கள் ஆட்டோ வாங்க ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப் பட இருக்கிறது. அந்த மானியம் குறித்த தகவல்களை இப்பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பெண்களுக்குச் சுயமாக ஒரு தொழில் இருப்பது அவசியமான ஒன்றாக, இக்காலக்கட்டத்தில் இருக்கிறது. அதுவே பெண்களைத் தங்களுக்குத் தானே தன் சொந்த காலில் நிற்க வைக்க பயனுள்ளதாக இருக்கும். யாரையும் சார்ந்து இருக்காத நிலையை ஏற்படுத்தும். பணத்தேவையில் பூர்த்திப் பெற்றுவிட்டால், தன் சுயம் சார்ந்த கருத்துக்களிலும் முழு கவனம் பெற்றுவிடலாம். அந்த நிலையில் பெண்களுக்கு என்று ஒரு சுய தொழில் இருக்க வேண்டும்.
பெண்களின் சுயத் தொழில் சார்ந்தும், சுயத் தேவை சார்ந்தும் மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு திட்டங்களையும், மானியங்களையும் வழங்கிவருகின்றது. அந்த வகையில் சென்ற வாரம் சட்டப்பேரவையில் பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டொ வழங்க ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கப்பட இருக்கிறது என அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பு ஆனது நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் வாக்குறிதியாகக் கொடுக்கப்பட்டது என்பது நினைவு கூறத்தக்கது. இந்நிலையில், இந்த தேர்தல் வாக்குறிதி இப்பொழுது நிறைவேற்றப்பட உள்ளது.
பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க ரூ. 1 லட்சம் மானியம் எனும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக சென்ற வாரம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் சட்டப் பேரவையில் தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு அமைப்புச் சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு புதியதாக ஆட்டோ வாங்க தலா 1 லட்சம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மானியம் பெற வைத்திருக்க வேண்டியவை
ஆதார் கார்டு
வருமானச் சான்று
சாதிச் சான்று
இருப்பிடச் சான்று
LLR ஓட்டுநர் உரிமம்
தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் வாரியத்தில் பதிவு
தானியங்கி மோட்டார் வாகனப் பழுதுபார்க்கும் தொழிலாளர் பதிவு
பெண் ஓட்டுநர்களில் 500 பேருக்கு இந்த திட்டத்தின் மூலம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதி உள்ள பெண் ஓட்டுநர்கள் தங்கள் இருப்பிட பகுதிக்கு, அருகில் உள்ள ஓட்டுநர் வாரியத்தில் விவரங்களைக் கேட்டுப் பெறலாம்.
விருப்பம் உள்ள பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.
மேலும் படிக்க
ஆடு வளர்ப்புக்கு 90% மானியம்! இன்றே விண்ணப்பியுங்கள்!!
விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வாங்க மானியம்! இன்றே விண்ணப்பியுங்கள்!!