இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 1 May, 2022 11:45 AM IST

நம் அஞ்சறைப்பெட்டியில் கட்டாயம் இடம்பெறுவது ஏலக்காய். இந்த ஏலக்காய் உணவுக்கு வாசனையைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், பல மருத்துவ நன்மைகளையும் நமக்குத் தருகிறது. அதிலும், இரவில் தூங்குவதற்கு முன்பு தினமும் 3 ஏலக்காயை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றன. ஏலக்காய் இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்தது. எனவே ஏலக்காய், இஞ்சி இரண்டின் ஆரோக்கிய நன்மைகளும் ஒரே மாதிரியானவை.

ஏலக்காய் சாப்பிட்டால், வாய் துர்நாற்றம், இதயம் தொடர்பான பிரச்சனைகள், விக்கல், தோல் தொற்று நோய் போன்றவற்றை போக்குகிறது.
ஏலக்காயில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.

நல்ல உறக்கம்

இதனால், ஏலக்காய் உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருளாகப் பார்க்கப்படுகிறது. தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன்பு, குறைந்தது 3 ஏலக்காயை வெதுவெதுப்பான நீரில் போட்டு சாப்பிடுங்கள். இப்படி தினமும் 3 ஏலக்காயை சாப்பிட்டால், நல்ல உறக்கம் வரும். குறட்டை பிரச்னை தீரும்.

3 ஏலக்காய்

தினமும் வெதுவெதுப்பான நீரில் 3 ஏலக்காயை சாப்பிடுவதால், வாயுத் தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்னைகளை சரி செய்கிறது. அதுமட்டுமில்லாமல், ஏலக்காய் நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா, இதய பாதிப்பு கொண்டவர்கள் என தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை அளிக்கிறது.

அதைவிட முக்கியமானது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு என்பதை தெரிந்துகொள்ளுங்கள். மனப்பதட்டம், குமட்டல் போன்றவற்றிற்கும் ஏலக்காய் சிறந்த மருந்தாக இருக்கிறது.

பருவநிலை மாற்றத்தின்போது, வரும் சளி, இருமல், காய்ச்சலுக்கு ஏலக்காய் சிறந்த வீட்டு வைத்தியம் என்று கூறலாம். உடல் பருமன் , உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, போன்ற பிரச்னைகளுக்கும் ஏலக்காய் நல்ல பலன் அளிக்கிறது. ஏலக்காய் புற்று நோய் எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது என்பது முக்கியச் செய்தி. அதனால், இரவில் தூங்குவதற்கு முன்பு தினமும் 3 ஏலக்காயை வெதுவெதுப்பான நீரில் சாப்பிட்டு உங்கள் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...

English Summary: 3 cardamoms before going to bed- how many benefits!
Published on: 01 May 2022, 11:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now