1. விவசாய தகவல்கள்

மாம்பழங்களைப் பாதுகாப்பாகப் பழக்க வைப்பது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

முக்கனிகளில் முதன்மைக் கனி என்றால் அது மாங்கனி. மாவைப் பொருத்தவரை, மாங்காயாக இருந்தாலும் சரி, பழமாக இருந்தாலும் சரி, அதை நாம் வைத்திருக்கிறோம் என்பதற்கு மாமபழத்தின் மணமே சாட்சி.
தற்போது தான் மாம்பழங்கள் அறுவடை காலம் தொடங்கிஉள்ளது. சித்திரை முதல் ஆவணி15வரை மாம்பழங்கள் விற்பனைக்கு வருகின்றன.

இந்த கால கட்டத்தில நாம் செயற்கை யான முறையில் கால்சியம் கார்பைடு கல் முலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை வாங்க கூடாது இவை பார்ப்பதற்காக அழகாக இருந்தாலும்கூட உண்ணுவதற்கு ஏற்றவை அல்ல.
பொதுவாக மா, அறுவடைக்குபின் பழுக்க வைக்கும் தன்மை கொண்ட வை. நன்றாக விளைந்த மாங்காய்களை அறுவடை செய்தப் பின்பு கீழ்க்கண்ட முறை பழுக்க வைக்கப்பட வேண்டும்.

  • பழுத்த பழங்களையும்,பழுக்காத பழங்களையும் காற்றோட்டமான பெட்டியில்வைத்து, அதில் ஏற்கனவே பழுத்த பழங்களில் இருந்து வெளியேறும் எத்திலின் வாயு வெளியேறி பழுக்காத பழங்களை விரைவாக பழுக்க வைக்க உதவுகின்றன.

  • காற்றுபுகாத அறையில் பழங்களை அடுக்கி வைத்து புகை முட்டம் போடுவதால் அசிட்டிலின் வாயு வெளியேறி பழங்கள் பழுக்க வைக்க உதவுகின்றன. இந்த முறையில் பழங்களின் தரம் பாதிக்கப்படும்.

  • வைக்கோல் கொண்டு வரிசையாக அடுக்கி வைக்கப்படும், மாம்காய்கள் ஒரு வாரத்தில் பழுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  • பழங்கள் பழுக்க வைக்கும் அறையில் (Ripeningchamber) பழங்களை வைத்து எத்திலின் வாயுநிரப்பட்ட புட்டியை வைத்தால் 24-48 மணிநேரத்தில் பழங்கள் பழுக்க தொடங்கும்.

  • 1 சதவீத எத்திரலை, 1லிட்டர் நீரில் கலந்து, பழங்களின் காம்பு பகுதியை துடைத்து எடுக்க வேண்டும் இவற்றை ஒன்றுடன் ஒன்று ஓட்டாமல் இருக்க செய்தி தாளை பரப்பிஅவற்றின் மீது பருத்தி துணியால் முடி வைத்தால் பழங்கள் உடனே பழுக்க ஆரம்பிக்கும்.

  • எத்திலின் வாயு கொண்டு பழங்களை பழுக்க வைக்க முடியும். எத்தப்பான் மருந்தைப்  பழங்களின் மீது தெளிக்கும்போது எத்திலின் வாயு வெளியேறும். இந்த வாயுவின் காரணமாக, பழங்கள் சீராக பழுக்க உதவுகின்றன.

கார்பைடு வேண்டாம்

எக்காரணம் கொண்டு கால்சியம் கார்பைடு கொண்ட பழங்களை பழுக்க வைக்க கூடாது. ஒருசில வணிகர்கள் இந்த முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யகின்றனர்.இவற்றை வாங்கி சாப்பட்டால் வாந்தி, வயிற்று வலி ,வயிற்று போக்கு எற்படும்.

எனவே நல்ல பழுத்த பழங்களை வாங்கி இந்த கோடை காலத்தில் உண்டு, உடல் நலத்தையும் பேணுவோம்.

தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை

மேலும் படிக்க...

பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் கால்சியம் குறைபாடு!

பிச்சை எடுத்து அன்னதானத்திற்கு ரூ1 லட்சம் நிதி- பிரமிப்பூட்டிய பாட்டி!

English Summary: How to get used to mangoes? Published on: 01 May 2022, 10:50 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.