இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 7 July, 2021 11:04 AM IST

பற்சிதைவு,சொத்தை பல் என்பது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவர்க்கும் நேரிடும் பிரச்னையாக உள்ளது. சொத்தை பல் ஏன் ஏற்படுகிறது என்று யோசித்து பார்த்தால் அதற்கு முக்கிய காரணம் நாம் உட்கொள்ளும் உணவு ஆகும். அதிக இனிப்புச் சுவை உள்ள உணவை உட்கொள்வது பற்சொத்தைக்கு முக்கிய காரணியாக இருக்கிறது. இதனுடன் சரியாக ப்ருஷ் செய்யாத ஆகிய காரணங்களும் அடங்குகின்றன.

பற்களை பாதிக்கும் ஐந்து மோசமான உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இனிப்புகள் எளிதில் கரையக் கூடியதாகும். சில இனிப்பு வகைகள் நன்றாக மென்று சாப்பிடக் கூடியதாக இருக்கும் அதாவது  சாக்லெட், லாலிபாப், ஜெல்லி ஆகியவை பற்களில் ஒட்டிக்கொள்ளும் வகையான இனிப்புகள் . பற்களில் இவை ஒட்டிக்கொள்ளும்போது பாக்டீரியாவுக்கு அடைக்கலமாக மாறிவிடுகிறது. இனிப்புகள் அதிகமாக சாப்பிடும்போது பற்களில் இருக்கும் பாக்டீரியாவின் பரவலுக்கு காரணமாகிவிடுகிறது. எனவே இனிப்பு உணவுகளை குறைத்துக்கொள்வது அவசியம். அப்படி சாப்பிட்டால் கட்டாயமாக வாய் கொப்பளிக்க வேண்டும். இரவு கட்டாயம் பிரஷ் செய்வதன் மூலம் பற்கள் சொத்தையாவதைத் தவிர்க்க முடியும்.

இனிப்பு உணவு, பானங்களை அருந்தும்போது அது பற்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவகுக்கின்றன. சர்க்கரை உணவை சாப்பிடுவது பற்களின் எனாமலை பாதிப்புக்கு வழிவகுக்கக்கூடும்.

குளிர்பானங்கள் குடிப்பது பற்களை பாதிப்படைய செய்கின்றன. குளிர்பானங்களில் அதிக அளவில் சர்க்கரை மற்றும் அமிலம் இருக்கும். இது பற்களின் எனாமலை பாதித்து பற்குழிவுகளை ஏற்படுத்துகிறது. பற்களின் ஆரோக்கியத்தைக் காக்க கார்பனேட்டட், சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது.

ஊறுகாய் கூட பற்களை அதிகளவில் பாதிக்கக்கூடும். ஊறுகாய் கெட்டுப்போகாமல் இருக்க அதிகளவில் உப்பு, வினிகர் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் ஊறுகாயில் ஒருவித அமிலத்தன்மையை உருவாக்குகிறது. இந்த அமிலம் பற்களின் எனாமலை அதிகளவில் பாதிக்கிறது.

உலர் திராட்சை, அன்னாசிப்பழம் ஆகியவை சாப்பிட சுவையாக இருக்கலாம்  ஆனால் அவை பற்களின் இடுக்குகளில் சிக்கிக்கொள்ளும் தன்மை பற்சொத்தைக்கு காரணமாகிவிடுகிறது. எப்போதாவது இவற்றைச் சாப்பிட்டால் தவறு இல்லை. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பற்கள் இடையே சிக்கும் துணுக்குகள் மூலம் கிருமி பெருக்கம் ஏற்பட்டு பல் சொத்தை ஆகலாம்.

சிட்ரிக் பழங்கள் உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கும். ஆனால் அது பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். சிட்ரிக் அமிலம் பற்களின் எனாமலை பாதிப்பது மட்டுமல்லாமல் பற்கூச்சம், பல் சொத்தை ஆகியவற்றை ஏற்படுத்தும். எனவே சிட்ரஸ் பழச் சாறுகாலை அருந்தும்போது பற்கள் மீது படாமல் ஸ்டிரா மூலம் உறிஞ்சி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தபடுகிறது.

மேலும் படிக்க:

சப்ஜா விதைகளின் 6 நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலிக்கு வெந்தயம் தீர்வு

கருப்பு பூண்டின் ஆரோக்கியமான நன்மைகள்

English Summary: 5 Bad Foods That Affect Teeth! Must see.
Published on: 07 July 2021, 10:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now