நீங்கள் சிறுநீரக கற்களால் அவதிப்படுகிறீர்களா? அந்த வேதனையான வலி உங்கள் அமைதியைக் கெடுக்கிறதா? அந்தத் தாங்க முடியாத வலியால் உங்கள் வேலையைத் தவிர்த்துவிட்டீர்களா? பிறகு, கவலைப்பட வேண்டாம், உங்கள் சிறுநீரக கற்கள் பிரச்சனையை எவ்வாறு சமாளிப்பது என்பதை இப்பதிவில் விரிவாகக் காணலாம்.
சிறுநீரகக் கல் என்பது நெஃப்ரோலிதியாசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. சிறுநீரில் கல்லை உருவாக்கும் பொருட்களின் அதிகரிப்பு அல்லது சிறுநீரின் அளவு குறையும் போது இது உருவாகிறது. இந்த கடினமான நிலைக்கு, சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், சிறுநீர் பாதையை அடைப்பது போன்ற சிக்கல்களை உருவாக்கலாம். சிறுநீரகக் கற்களால் ஏற்படும் வலியை அனுபவித்த யாவரும், சொல்லும் முதல் பதில் மிகுந்த அசௌகரியத்தையும், பயங்கரமான வலியையும் ஏற்படுத்தும் என்பதுதான்.
சிறுநீரக கற்களின் அறிகுறிகள்
முதுகு, வயிறு அல்லது பக்கவாட்டில் வலி
சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு அல்லது வலி
அடிக்கடி மற்றும் அவசரமாக சிறுநீர் கழித்தல்
சிறுநீரில் இரத்தம்
முழுமையடையாத சிறுநீர்ப்பை காலியாக்கும் உணர்வு
துர்நாற்றம் கொண்ட சிறுநீர்
குமட்டல் மற்றும் வாந்தி
குளிர் மற்றும் காய்ச்சல்
மேலும் படிக்க: குருட்டுத் தன்மையை ஏற்படுத்தும் உணவுகள்: அதிர்ச்சித் தகவல்!
சிறுநீரக கற்களை குணப்படுத்தும் வீட்டு வைத்தியம்
சிறுநீரகக் கற்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதை குணப்படுத்துவது முக்கியமானதாகும். எனவே, உங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த இயற்கை தீர்வுகளையும் நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த ஐந்து வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.
மேலும் படிக்க: பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் தரும் மத்திய அரசு! இன்றே விண்ணப்பியுங்கள்!!
எலுமிச்சை சாறு
சமையலறைகளில் அதிகம் காணப்படும் பொருட்களில் எலுமிச்சையும் ஒன்று. ஒவ்வொரு கிளாஸ் தண்ணீரிலும் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்ப்பது சிறுநீரகக் கற்களுக்கு எதிராக பெரிதும் உதவுகிறது. எலுமிச்சையில் சிட்ரேட் என்ற கலவை உள்ளது. இது சிறுநீரகங்களுக்குள் கால்சியம் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது. கூடுதலாக, சிட்ரேட் சிறுநீரகத்தில் ஏற்கனவே இருக்கும் சிறிய கற்களை உடைக்க உதவுகிறது. இது சிறுநீர் வழியாக கல் வெளியேற வழிவகுக்கிறது.
மேலும் படிக்க: உடல் எடையைக் குறைக்க வீட்டுப் பொருட்களே போதும்!
ஆப்பிள் சிடர் வினிகர்
ஆப்பிள் சிடர் வினிகரை அருகில் உள்ள மளிகைக் கடையில் இருந்து எளிதாகப் பெறலாம். உணவுகளுக்கு ஒரு சுவையை வழங்குவதோடு, வினிகரில் சிட்ரிக் அமிலமும் உள்ளது. இந்த அமிலம் சிறுநீரக கற்களைக் கரைக்க உதவுகிறது. இது வயிற்றில் உள்ள அமிலங்களின் அளவை அதிகரிக்க உதவும். எனவே, சிறுநீரகங்களுக்குள் கூடுதல் கற்கள் உருவாவதையும், இது தடுக்கிறது. இருப்பினும், ஒவ்வொரு நாளும் அதிக அளவு ஆப்பிள் சிடர் வினிகரை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்வது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் குறைந்த அளவு பொட்டாசியத்திற்கு வழிவகுக்கும். நீரிழிவு நோயாளிகளும் ஆப்பிள் சிடர் வினிகரை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் படிக்க: 50% மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் பெறுவது எப்படி? இன்றே விண்ணப்பியுங்கள்!
தேங்காய் தண்ணீர்
சிறுநீரக கற்களுக்கு, இது ஒரு அற்புதமான மருந்து ஆகும். அந்த அற்புதமான தேங்காய் நீரால் உங்கள் உடலின் சிறுநீர் வெளியேற்றம் அதிகரிக்கும். மேலும், இதில் உள்ள பொட்டாசியம் அமில சிறுநீரைக் காரமாக்க உதவுகிறது. சிறுநீரக கற்களுக்கு விடைகொடுத்து வலியிலிருந்து விடுபட வைக்கிறது.
பேக்கிங் சோடா
கல் உருவாவதற்குக் காரணமான சிறுநீரில் உள்ள அமிலத்தன்மை பேக்கிங் சோடாவின் காரத்தன்மையால் குறைக்கப்படலாம். எனவே, இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கல்லின் அளவுகள் கரைந்து சிறயதாக மாறினால், அந்த கற்கள் உங்கள் சிறுநீர் அமைப்பு வழியாக வெளி செல்லலாம். அதனால், சிறிது பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும்.
மேலும் படிக்க: தினமும் 7 ரூபாய் சேமித்து 60,000 பென்சன் பெறும் சூப்பர் திட்டம்!
கோதுமை புல் சாறு
கோதுமைப் புல்லில் கலவைகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கின்றன. அதோடு, சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும் அதே வேளையில் அவை எளிதில் வெளியேற அனுமதிக்கின்றன.
சிறுநீரக கற்கள் இருந்தாலோ அல்லது நீங்கள் தற்போது கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகள் சில இயற்கை வைத்தியங்களாகச் செயல்படுகின்றன. இருப்பினும், உங்களுக்குச் சிறுநீரகக் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டால், உங்கள் நிலைமைகளைக் கண்காணிக்க மருத்துவரை தவறாமல் அணுகவும். இந்த இயற்கை வைத்தியங்களைத் தவிர, நிலைமையைக் குணப்படுத்த முறையான மருந்துகளும் தேவைப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
மேலும் படிக்க
பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் தரும் மத்திய அரசு! இன்றே விண்ணப்பியுங்கள்!!