பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை என்றபோதிலும், சிலவகைப் பழங்களில் தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக அதன் சுவை நம்மைக் கவருகிறது என்பதற்காக, அதிகளவில் சாப்பிடும்போது, இந்தப் பக்கவிளைவுகளும் தங்கள் வேலையைக் காட்டிவிடுகின்றன.
அந்த வகையில் பப்பாளியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. சரும பிரச்சனைகள் இருந்து சிறுநீரக கற்களை போக்கும் வரை இதன் பயன்கள் ஏராளம். விட்டமின் ஏ முதல் ஏராளமான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளப் பப்பாளி,பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்புத் திறன் கொண்டது. ஆனால் சில பக்க விளைவுகளும் இருக்கின்றன. எனவே இதனை அளவோடும் கவனத்தோடும் சாப்பிட வேண்டியது அவசியம்.
அப்படி பப்பாளி பழத்தை அதிகமாக சாப்பிட்டால் என்னென்னப் பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதைப் பட்டியலிட்டுள்ளோம்.
டயேரியா
பப்பாளியில் பென்சில் ஐசோதியோசயனேட் என்று நச்சுத் தன்மையை உண்டாக்கும் பொருட்கள் உள்ளன. இவை நம் உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
அழற்சி
நன்கு முழுமையாகப் பழுக்காத பப்பாளியில் உள்ள பால் போன்ற தன்மை சிலருக்கு அழற்சியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவேப் பழுக்காத பப்பாளியை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம்.
உயிரணுக்கள்
பப்பாளி விதைகளை அதிகளவு எடுத்துக்கொள்வது ஆண்களின் ஆண்மை தன்மையைப் பாதிக்கிறது. இதனால் உயிரணுக்களின் எண்ணிக்கையும் குறையும் விடுகிறது.
வயிற்றுக் கோளாறு
அதிகமாக பப்பாளி சாப்பிடுவதால் வயிற்று சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்துகள் வயிற்று பிடிப்புகள், வயிறு வீக்கம், குமட்டல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மருந்து எடுப்பவர்கள்
பப்பாளி பழத்தில் உள்ள பால் போன்ற தன்மை இரத்தத்தை நீர்க்கச் செய்ய வைக்கும் தன்மை கொண்டவை. பிளட் தின்னர் (Blood Thinner) எடுத்துக் கொள்பவர்களும் அறுவை சிகிச்சைக்குத் தயாராகும் நபர்கள் பப்பாளி பழத்தை எடுத்துக் கொள்வதைக் கட்டாயம் தவிர்க்கவும்.
ஹீமோபிலியா மற்றும் த்ரோம்போசிஸ் பிரச்சினை உள்ளவர்கள் பப்பாளி சாப்பிடுவது கூடாது.
கருச்சிதைவு
கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி பழம் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளது. பப்பாளி பழத்தின் விதைகள் கருக்கலைப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. கருப்பை சுருங்கி விரியும் தன்மையை அதிகப்படுத்தும். அதனால் கூடுமானவரை பப்பாளியில் இருந்து கர்ப்பிணிகள் தள்ளி இருப்பது நல்லது.
ரத்த சர்க்கரை
பப்பாளியை அதிகமாக உண்ணும் போது நமது உணவுக்குழாய் தடைபட வாய்ப்பு உள்ளது. எனவே தினமும் அதிகமாக பப்பாளி பழத்தை சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. சர்க்கரை அளவு குறைத்து விடும் அபாயம் உள்ளது. பப்பாளி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும், சர்க்கரை நோயாளிகள் கூட இதனை கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம் என்றார்கள். அதேநேரத்தில் இரத்த அழுத்த மாத்திரைகளை எடுத்துக் கொள்பவருக்கு, பப்பாளி மிகுந்த தீங்கை விளைவிக்கும்.
இதயத் துடிப்பு
இதயக் கோளாறு உடையவர்கள் பப்பாளிப் பழத்தைச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்து. இதிலுள்ள பப்பேன் உங்க இதய துடிப்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க...
கொரோனாவால் அதிகரித்த ஆண்மைக் குறைபாடு பிரச்னை - ஆய்வில் தகவல்!