1. வாழ்வும் நலமும்

பரம்பரையாகத் தொடரும் நீரழிவுநோய்- பாதாமைக் கொண்டு விரட்டலாம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Hereditary Diabetes - Tips to Avoid!

நம் முன்னோர்களின் சொல்படி, பாரம்பரியமாக சில விஷயங்களைக் கடைப்பிடிக்கும் நம்மைப் பரம்பரையாகத் தொற்றும் வியாகதிகளில், நீரழிவு நோய் எனப்படும் சர்க்கரை வியாதி முதலிடம் வகிக்கிறது.ஆனால், இளம் வயதினரிடையே நீரிழிவு நோய்க்கு முந்தைய ஆபத்து காரணிகளைக் கட்டுப்படுத்துவதில் பாதாம் பருப்பு முக்கிய இடம் வகிக்கிறது எனப் புதிய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

இதற்கு, நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் தங்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம்.
இவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உயர்ந்த இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் மற்ற மற்ற பக்க விளைவுகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த மாதிரியான உணவுகளுக்கு நட்ஸ் மற்றும் விதைகள் போன்ற சில வகையான உணவுகள் பெரிய நன்மைகள் அளிக்கும்.உணவில் சில விதைகளைச் சேர்த்துக்கொள்வது முக்கியம் என்றாலும், இளம் வயதினரிடையே நீரிழிவு நோய் ஆபத்தைக் காரணிகளை கட்டுப்படுத்துவதில் பாதாம் அதிசயத்தை நிகழ்த்துகிறது என புதிய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

நன்மைகள்

பாதாம் பருப்பை தவறாமல் சாப்பிடுவது முக்கிய ஆரோக்கியத்தை நிர்வகிக்க உதவுகிறது. மேலும் இரத்த சர்க்கரை அளவுகள், கொலஸ்ட்ரால், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் எடை குறைப்பை ஊக்குவிக்கும் என்று பல ஆண்டுகளாக நம்பப்படுகிறது.

ஒரு கைப்பிடி பாதாம் (சுமார் 28 கிராம்)

கலோரிகள்: 161

ஃபைபர்: 3.5 கிராம்

புரதம்: 6 கிராம்

கார்போஹைட்ரேட்டுகள்: 2.5 கிராம்

கொழுப்பு: 14 கிராம்

37% வைட்டமின் ஈ பரிந்துரைக்கப்படுகிறது

32% மெக்னீசியம் பரிந்துரைக்கப்படுகிறது

16-25 வயதுக்குட்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பாதாம் வளர்சிதை மாற்ற செயலிழப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அழற்சி பண்களுகளில் பாதாம் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் பங்கேற்பாளர்களின் எடை, உயரம், இடுப்பு சுற்றளவு, குளுக்கோஸ் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் அளவிடப்பட்டபோது, பாதாம் சாப்பிட்டவர்களின் இரத்த குளுக்கோஸ் அளவுகளில் கணிசமான வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது. ஆனாலும் ஆரம்பத்தில் இருந்தே பாதாம் பருப்பை சாப்பிடாதவர்களை காட்டிலும் ஆயவில் பங்கேற்றவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு குறைந்த குளுக்கோஸ் அளவைப் பெற்றிருந்தனர்.

குளுக்கோஸ் அளவைக் குறைக்க

பாதாம், எல்.டி.எல் (குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம்) அளவைக் குறைப்பது மட்டுமின்றி உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. வீக்கம் மற்றும் இதய நோய் ஆபத்துக்களை குறைக்க உதவுகிறது.இது ப்ரீடியாபெடிக் நோய்க்கான கூடுதல் ஆபத்து காரணிகளாகும். பாதாமில் உள்ள குறிப்பிடத்தக்க அளவு மெக்னீசியம் செறிவு டைப் 2 நீரிழிவு நோயின் வளர்ச்சியைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

உடலில் இன்சுலின் சுரப்பைக் கட்டுப்படுத்தவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.இதன்மூலம் நீரிழிவு மற்றும் இதய நோய்க்கான வாய்ப்பைக் முற்றிலும் கட்டுப்படுத்துகிறது. பாதாம் பருப்பு உங்கள் தினசரி மெக்னீசியம் தேவைகளைப் பூர்த்தி செய்யும். பாதாம் பருப்புகளை உட்கொள்வது நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவும் நீண்ட காலத்திற்கு சர்க்கரை அளவை நிர்வகிக்கவும் உதவும்.

எப்படி சாப்பிடுவது?

  • உப்பில்லாத மற்றும் பச்சையான பாதாம் சிறந்தது.

  • இரவில் அல்லது ஊறவைத்த பாதாம் பருப்பும் சாப்பிடலாம்.

  • சிறந்த ஆரோக்கியத்திற்காக தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவு பாதாம் சாப்பிடுவதை கடைபிடிக்கவும். ஒரு நாளைக்கு 8-10 (அல்லது ஒரு கைப்பிடி) அல்லது பாதாம் சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள்.

  • சர்க்கரை அல்லது தேன் பூச்சு சேர்த்த பாதாம் பருப்புகளையும் தவிர்க்கவும்.

  • ஓட்ஸ், மியூஸ்லி, தயிர் மற்றும் புதிய பழங்களின் கிண்ணத்தில் சேர்த்து, பாதாம் பாலை தேர்வு செய்து சாப்பிடலாம்.

  • பாதாமைத் தவிர, சர்க்கரை நோயாளிகள் வேர்க்கடலை, பிஸ்தா, அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க...

கொரோனாவால் அதிகரித்த ஆண்மைக் குறைபாடு பிரச்னை - ஆய்வில் தகவல்!

வெள்ளரிக்காய் சாப்பிட்டால், இத்தனைப் பக்கவிளைவுகள்!

English Summary: Hereditary Diabetes - Get Rid Of Almonds! Published on: 16 March 2022, 11:21 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.