ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகள், விலை ஏற்றம் இறக்கம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை சாமானிய மக்களுடன் தொடர்புடைய விதிமுறைகளாக இருக்கின்றன. அவ்வகையில், நவம்பர் முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளை பற்றி பார்க்கலாம்.
சிலிண்டர் விலை (Cylinder Price)
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலையில் ஏதாவது திருத்தம் செய்யப்படும். சில மாதங்களில் விலை திருத்தம் செய்யப்படாமலும் இருந்துள்ளது. அவ்வகையில் நாளை சிலிண்டர் விலை திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும்போது வாடிக்கையாளரின் மொபைலுக்கு OTP வரும். சிலிண்டர் டெலிவரியின்போது OTPயை சொல்ல வேண்டும். அப்போதுதான் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும்.
இன்சூரன்ஸ் (Insurance)
நவம்பர் 1ஆம் தேதி முதல் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு KYC கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி இனி சுகாதார காப்பீடு மற்றும் பொது காப்பீடு பாலிசிகளுக்கு KYC கட்டாயமாக்கப்படுள்ளது.
ஜிஎஸ்டி (GST)
நவம்பர் 1ஆம் தேதி முதல், 5 கோடி ரூபாய்க்கு உட்பட்ட விற்றுமுதல் (turnover) கொண்ட நிறுவனங்கள் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்வதற்கு நான்கு இலக்க HSN code தேவை.
ரயில் நேர மாற்றம் (Train Timings Changed)
நெடுந்தூரம் பயணிக்கும் பல்வேறு ரயில்களுக்கான நேரம் நவம்பர் 1ஆம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
பழைய பென்சன் திட்டத்தில் புதிய பிரச்சனை: அச்சத்தில் அரசு ஊழியர்கள்!