1. செய்திகள்

ரயில் பயணிகளுக்கு இலவச உணவு: இது தெரியுமா உங்களுக்கு?

R. Balakrishnan
R. Balakrishnan
Free food for train passengers

இந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் ரயில் பயணங்களையே அதிகமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களின் முதன்மை தேர்வாக ரயில்கள் உள்ளன. பேருந்து, விமானம் போன்ற போக்குவரத்து வசதிகளை விட ரயில் பயணத்தில் டிக்கெட் கட்டணம் குறைவு. பாதுகாப்பும் அதிகம். சௌகரியமாகவும் பயணிக்கலாம்.

ரயில்கள் தாமதம் (Train Late)

ரயிலில் பயணிக்கும் நிறையப் பேர் இந்த சிரமத்தை சந்தித்திருப்பார்கள். ரயில் தாமதமாக வருவதால் மணிக் கணக்கில் காத்துக் கிடக்க வேண்டியிருக்கும். இது பலருக்கு பிரச்சினையாக இருக்கலாம். முதியவர்களும் பெண்களும் உடல் முடியாதவர்களும் இதனால் சிரமப்படுவார்கள். உண்மையில் ரயில்கள் இவ்வாறு தாமதமாக வந்தால் பயணிகளுக்கு சில சலுகைகள் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இலவச உணவு (Free Food)

ரயில் தாமதமாக வந்தால் IRCTC உங்களுக்கு சில சேவைகளை இலவசமாக வழங்குகிறது. நீங்கள் செல்ல வேண்டிய ரயில் கால அட்டவணையைத் தாண்டி தாமதமாக இயங்கினால், IRCTC உங்களுக்கு உணவு மற்றும் குளிர் பானம் வழங்குகிறது. இந்த உணவு உங்களுக்கு IRCTC அமைப்பால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. ரயில்வேயின் இந்த வசதியை நீங்கள் உரிமையோடு பயன்படுத்தலாம். இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, ரயில் தாமதமாகும்போது IRCTC இன் கேட்டரிங் கொள்கையின் கீழ் பயணிகளுக்கு காலை உணவு மற்றும் சாப்பாடு வழங்கப்படுகிறது.

விதிமுறை (Rule)

IRCTC விதிகளின்படி, பயணிகளுக்கு இலவச மீல் (சாப்பாடு) வழங்கப்படுகிறது. ஆனால் ரயில் 30 நிமிடம் தாமதமாக வந்தால் உணவு வசதி கிடையாது. கேட்டரிங் கொள்கையின்படி, ரயில் இரண்டு மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வந்தால், எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த வசதி வழங்கப்படுகிறது. அதாவது சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இச்சேவை கிடைக்கும்.

உணவுப் பட்டியல் (Food List)

காலை உணவில் டீ அல்லது காபி மற்றும் இரண்டு பிஸ்கட்கள், மாலை சிற்றுண்டியில் டீ அல்லது காபி மற்றும் நான்கு பிரட் ஸ்லைஸ்கள் வழங்கப்படுகிறது. ஐஆர்சிடிசி மூலம் பயணிகளுக்கு மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு ரைஸ், பருப்பு, ஊறுகாய் வழங்கப்படுகிறது. அல்லது 7 பூரிகள், வெஜ்/ஆலு பாஜி, ஊறுகாய் பாக்கெட் கொடுக்கப்படுகிறது.

மேலும் படிக்க

நவம்பர் 30-க்குள் ரேஷன் கார்டுகள் ரத்து: புதிய விதிமுறைகள் வெளியீடு!

இரயில் பயணிகள் கவனத்திற்கு: இன்று 180 ரயில்கள் ரத்து!

English Summary: Free food for train passengers: Did you know this? Published on: 30 October 2022, 12:12 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.