இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 13 March, 2021 6:43 AM IST

மருத்துவ குணங்களை கொண்ட மூலிகைகளில் நீர்பிரம்மியும் ஒன்று. பெரும்பாலும் இது குறித்து அறிந்திருக்க மாட்டீர்கள். சித்த மருத்துவத்தில் அதி முக்கியத்துவம் இந்த நீர்பிரம்மிக்கு உண்டு. மூலிகைகள் என்றாலே கசப்பு சுவைதான் என்று நினைப்பவர்கள் இந்த நீர்பிரம்மி மூலிகை குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இது பிரம்மி, விமலம், பிரமிய வழுக்கை, பூடு, வாக்குபலம் என்று அழைக்கப்படுகிறது. நீர்பிரம்மி பெயருக்கேற்றபடி உடலில் தலையின் செயல்பாடுகளை சீர்படுத்துகிறது. பிரம்மம் என்றால் தலைமையானது என்று சொல்வார்கள். நீர்பிரம்மி செடி முழுவதுமாக பச்சையாக இருக்கும். இதன் இலை உருண்டையாக இருக்கும். இதன் பூ வெள்ளையாக இருக்கும். இனிப்பு சுவை கொண்ட இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

நினைவுத்திறனை அதிகப்படுத்தும்

நீர் பிரம்மியும் நினைவுத்திறனை அதிகரிக்க செய்யும் வல்லமை கொண்டவை. குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை காலை வேளையில் நீர்பிரம்மி இலை ஒன்றை சாப்பிட கொடுத்தால் நினைவுத்திறன் அதிகரிக்கும். இல்லையெனில் இந்த இலையை துவையலாக்கியும் சாப்பிட்டு வரலாம். நீர்பிரம்மி அமைலாய்ட் திட்டுகள் மூளையில் தேங்குவதை தடுத்து அல்சைமர் நோய் தாக்கத்தை தடுக்கவோ அல்லது தள்ளிப்போடவோ செய்கிறது.

நரம்புத்தளர்ச்சியை நீக்கும்

நரம்புத்தளர்ச்சி பிரச்சனை இருப்பவர்கள் உணவில் கவனம் செலுத்தினால் பிரச்சனையின் தீவிரம் அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம். இது உடலில் நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கும் குணம் கொண்டது. நரம்பு இழைகளோடு மூளைப்புறணி கூர்மையாக செயல்படுவதற்கு நீர்பிரம்மி தூண்டுகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது மனப்பதற்றத்தை குறைத்து மன அழுத்தத்தை குறைக்க செய்யும்.

 

மதுவை மறக்கடிக்கும்

குடிப்பழக்கத்தை கொண்டிருப்பவர்கள் அதை மறக்க செய்ய ஏதுவாக நீர்பிரம்மியை மூலமாக வைத்து வேறு சில பொருள்களும் சேர்த்து நீராக காய்ச்சி கொடுக்கப்படுகிறது. இது குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை மீட்க செய்கிறது. நீர்பிரம்மி புற்று செல்களின் பெருக்கத்தை தடுப்பதாக ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செரிமானக்கோளாறுகள் இருப்பவர்கள் இஞ்சியை அவ்வபோது உணவில் சேர்த்து வருவதுண்டு. இவர்கள் இஞ்சியோடு நீர்பிரம்மி இலையையும் கலந்து கஷாயமாக்கி குடிக்கலாம். வயிற்றுப்புண், குடல் புண், வாய்ப்புண் கொண்டிருப்பவர்கள் மணத்தக்காளியை எடுத்துகொள்வது உண்டு. அவர்கள் மணத்தக்காளியுடன் இந்த நீர்பிரம்மி இலையையும் சேர்த்து எடுத்துகொண்டால் புண் வேகமாக குணமாகும்.

தொண்டை கரகரப்பு நீங்கும்

நீரி பிரம்மி இலையை எடுத்து சுத்தம் செய்து அதை மைய அரைத்து சாறாக்கி குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும். பெண்கள் தங்களது தொண்டை மென்மையாக இருக்க விரும்பினால் நீர்பிரம்மி இலையின் சாறை குடிக்கலாம். சரியான உச்சரிப்பு வராதவர்கள், பேச்சில் தடுமாற்றம் கொண்டிருப்பவர்களுக்கு சித்த மருத்துவம் சொல்லும் மருந்தில் நீர்பிரம்மியும் உண்டு.

மூட்டுகளில் வீக்கம்

உடலில் குறீப்பாக தசைகள் மூட்டுகளில் வீக்கம் உண்டாகும். அப்போது வீக்கத்தோடு வலியும் அதிகரிக்கும். வீக்கத்தை குணப்படுத்த நீர்பிரம்மி இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி இளஞ்சூட்டோடு அந்த இடத்தில் வைத்து துணியால் கட்டி விடவும். தினமும் இதை செய்து வந்தால் வீக்கமும் அதனோடு வலியும் குறையும். மூளையின் செயல்திறன் குறைந்தவர்களும், நரம்பு சம்பந்தமான பிரச்சனை கொண்டவர்களுக்கும் நீர்பிரம்மி இயற்கை தந்த அருமருந்து என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க...

நிம்மதியான தூக்கத்திற்கு நாங்கள் கியாரண்டி! இரவில் யோகா செய்வதால் இத்தனை நன்மைகளா?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சாப்பிடுங்கள்!

பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

English Summary: All you want to know about Neer Brahmi, best herbal nectar that strengthens the nerves and brain !!
Published on: 13 March 2021, 06:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now