Health & Lifestyle

Friday, 08 November 2019 06:05 PM , by: Deiva Bindhiya

உலகம் முழுவதும் நிறைந்திருக்கும், கண்ணுக்கு புலப்படாத ஒரு நோய் 'மன அழுத்தம்'. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஏதோ ஒரு வகையில், அன்றாட வாழ்கையில் மன அழுத்தத்தை சந்தித்து வருகின்றனர். அரை நூற்றாண்டு வரை மன அழுத்தம் என்றால் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த மன அழுத்தத்தை நாம் உண்ணும் உணவுகள் மூலமும், வாழ்கை முறை மூலமும் சரி செய்ய இயலும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மனம் அமைதியாகவும் எவ்வித அழுத்தமும் இல்லாமல் இருந்தால் எளிதில் உடல் நலம் பாதிக்காது. துக்கம், உடலின் ஆரோக்கியத்திற்கு மிக மிக அடிப்படையான ஒன்று. அவரவர்களின் வயதிற்கேற்ப தூங்குவது மிக அவசியம்.  முடிந்த வரை இரவில் உங்கள் அலுவல் பணியோ, செல்போன் பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தாருடன் கலந்துரையாடி உங்கள் உறக்கத்தை துவங்குங்கள். உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைப்பதற்கு கீழே கொடுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது. 

மன அழுத்தம் குறைக்கும் வழிமுறைகள்

  • இரவில் தூங்குவதற்கு முன் ஒரு டம்ளர் பாலில் அரை தேக்கரண்டி அமுக்கரா கிழங்குப் பொடி சேர்த்து மிதமான சூட்டில் அருந்தினால்  நிம்மதியான தூக்கம் வரும். 
  • உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருப்பது மிக அவசியம். தினசரி இருமுறை குளிப்பது, வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல், சித்த மருத்துவம் பரிந்துரைக்கும் பிரமித் தைலம், அசைத் தைலம், குளிர்தாமரைத் தைலம் இவற்றில் ஏதேனும் ஒன்றை வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை தேய்த்து குளிக்கலாம்.
  • துரித உணவுகள், செயற்கை நிறமூட்டிகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு எதிரானவை. எளிதில் செரிக்க கூடிய உணவுகள், குறிப்பாக ஆவியில் வேகவைக்கும் நமது பாரம்பரிய உணவுகளை  இரவில் சாப்பிடுவது நல்லது.
  • மாதுளம்பழச் சாறு மன இறுக்கத்தைக் குறைக்க உதவும். அதே போன்று வாழைப்பழம் மனஅழுத்தத்துக்கு ஏற்ற மாமருந்தாக கூறப்படுகிறது.
  • மனஅழுத்தம் உள்ளவர்கள் சீரகத் தண்ணீர் அல்லது வெட்டிவேர் போட்ட மண்பானைத் தண்ணீரை  தொடர்ந்து அருந்தி வர உடலும், உள்ளமும் குளிர்ச்சி அடையும்.

மன அழுத்தத்தை போக்கும் மூலிகைகள்

அஸ்வகந்தா

நமது தூக்கத்தை நெறிப்படுத்தி, மனதிற்கு அமைதியூட்டி, மன அழுத்தத்தில் இருந்து விடுதலை தருகிறது.  இதனால் அஸ்வகந்தா தூக்கமின்மை பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது.

லாவெண்டர்

இதன் நறுமணம் மன அழுத்ததை போக்கி மிகவும் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. எண்ணெய் வடிவில் கிடைக்கும் இவை மேற்பூச்சு/மசாஜ்க்கு பயன்படுத்தப்படுகிறது.

துளசி

 “இயற்கை மருத்துவத்தின் தாய்” என அழைக்கப்படும் துளசி ஒன்று போதும், உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தின் ஆரோக்கியம், மன அழுத்தம் அனைத்தையும் மேம்படுத்துவதற்கு.

அதிமதுரம்

மன அழுத்தத்தை நெறிப்படுத்தி அமைதியையும்,  நிதானத்தையும் தர வல்ல மிகச்சிறந்த மூலிகை அதிமதுரம் ஆகும்.

வல்லாரைக் கீரை

நம் முன்னோர்கள் பயன்படுத்திய வல்லாரைக் கீரை மன அழுத்தத்தை குறைத்து, உடலில் உள்ள ஹார்மோன்களை முறையாக செயல் படுத்தும்.

மேலும் படிக்க:

TNPSC 2022 குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு: இதோ Download Link!

வெந்நீர் குடிப்பதால், இத்தனை, நன்மைகளா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)