
TNPSC 2022 Group 4 Hall Ticket Release: Here is the Download Link!
TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட் 2022 அப்டேட்: குரூப் 4 ஹால் டிக்கெட் 2022 வெளியிடப்பட்டது @ www.tnpsc.gov.in என்ற இணையத்தள வாயிலாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் குரூப் IV தேர்வு தேதி ஜூலை 24, 2022 ஆகும்.
வழக்கமாக, தமிழ்நாடு PSC அனைத்து தேர்வுகளுக்கும் tnpsc குரூப் 4 ஹால் டிக்கெட்டை தேர்வு தேதிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக வெளியிடும். அந்த வகையில், TNPSC குரூப் 4 ஹால் டிக்கெட் 2022 வெளியிடப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in இலிருந்து தங்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இதிலிருந்து நீங்கள் நேரடி இணைப்பைப் பெறலாம். TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் 2022க்கான பக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களும் ஹால் டிக்கெட் வெளியீடு குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடர்ந்து பார்க்க பரிந்துரைக்கப்படுகிறது. Tnpsc group 4 ஹால் டிக்கெட் 2022 pdf பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க: தரவரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்த, விஜய்சேதுபதியின் “கடைசி விவசாயி”!
#Rupee: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிவு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 7301 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப் 4 தேர்வு வரும் 24.07.2022 அன்று நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வா்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, மாவட்ட அளிவிளலான இலவச குரூப் 4 மாதிரி தேர்வு வரும் 17.07.2022 அன்று விருதுநகர் இந்து நாடார் செந்தில் குமார நாடார் கல்லூரியில் காலை 09.30 மணிக்கு நடைபெற உள்ளது. இம்மாதிரி தேர்வு எழுத விரும்பும் தேர்வா்கள் தங்கள் விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும்.
அதனடிப்படையில், தேர்வர்கள் www.vnjobfair.com என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை 15.07.2022 அன்று மாலை 4 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
மேலும் படிக்க:
Breaking: பெட்ரோல், டீசல் விலையில் ரூ.5 குறைப்பு: அரசின் முக்கிய அறிவிப்பு!
Share your comments