ஆரஞ்சு பழம் மிகவும் சத்தானது, ஊட்டச்சத்து நிறைந்தது என்றாலும் ஆரஞ்சு பழத்தை அதிகமாக உண்பது உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.
ஆரோக்கியத்தின் ரகசியம் (The secret of health)
உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதில் பழங்களின் பங்கு இன்றியமையாதவை. அதிலும் 6 மற்றும் 5 சுளைகளைத் தன்னுள் கொண்டுள்ளதால், ஆரஞ்சு என்று பெயர் பெற்ற ஆரஞ்சு பழம் சத்துக்கள் நிறைந்த பழமாகும்.
ஆரஞ்சு ஒரு சுவை மிகுந்த சிட்ரிக் பழமாகும். இது ஊட்டச்சத்துகள் நிறைந்தது என்கிற காரணத்தினாலேயே மக்கள் அதிகளவில் ஆரஞ்சு பழங்களை எடுத்துக் கொள்கின்றனர். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் கூட மற்ற பழங்களைச் சாப்பிடுவதைக் காட்டிலும் ஆரஞ்சை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
ஆரஞ்சு
அப்படி அதிகப்படியாக ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். இனிப்பு நிறைந்த புளிப்பு சுவையின் காரணமாக அனைவரும் விரும்பக்கூடிய ஒரு பழமாக ஆரஞ்சு பழம் உள்ளது.
நோய் எதிர்ப்பு ஆற்றல் (Immunity)
ஆரஞ்சு நம்மை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்துக் கொள்ள உதவும் வைட்டமின் சி இதில் அதிகமாக உள்ளது.
ஊட்டச்சத்துக்கள் (Nutrients)
100 கிராம் ஆரஞ்சு பழத்தில் 47 கிராம் கலோரிகள், 87 கிராம் தண்ணீர், 0.9 கிராம் புரதம், 11.8 கிராம் கார்போஹைட்ரேட், 9.4 கிராம் சர்க்கரை, 2.4 கிராம் நார்ச்சத்து நமக்கு தினசரி தேவையான அளவில் 76 சதவீதம் வைட்டமின் சி ஆகியவை உள்ளது. எனவே நாம் ஆரஞ்சு பழத்தை மிதமான அளவிலேதான் உட்கொள்ள வேண்டும்.
பக்க விளைவுகள் (Side effects)
-
ஒருவர் தினமும் 4 முதல் 5 ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டால், உடலில் நார்ச்சத்து அதிகரிக்கும். இது வயிற்று வலி, தசைப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
-
மேலும் வைட்டமின் சியை அதிகமாக எடுத்துக்கொள்வது நெஞ்செரிச்சல், வாந்தி, தூக்கமின்மை மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
-
ஆரஞ்சு பழங்கள் அதிக அமிலத்தன்மை கொண்டவை, இது உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் (ஜி.யி.ஆர்.டி) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தலாம்.
-
சில சந்தர்ப்பங்களில் அரிதாக வாந்தி மற்றும் நெஞ்செரிச்சலை ஆரஞ்சு பழம் ஏற்படுத்துகிறது.
-
அதேபோல உடலில் அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளவர்களுக்கு ஆரஞ்சு பழம் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
-
ஆரஞ்சு பழத்தில் குறைவான அளவிலேயே பொட்டாசியம் உள்ளது. ஆனால் உடலில் ஏற்கனவே அதிகப்படியான அளவில் பொட்டாசியல் இருந்தால், அதோடு ஆரஞ்சு பழத்தை சாப்பிடும்போது ஹைபர் கேமியா எனும் தீவிர உடல்நிலை பிரச்சனைகள் ஏற்படலாம்.
எத்தனை சாப்பிடலாம்? (How much can you eat?)
அதற்காக ஆரஞ்சு பழத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. அனுதினமும் கொஞ்சமாக ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 1 முதல் 2 ஆரஞ்சுகளை உட்கொள்ளலாம். அதற்கு மேல் உட்கொள்ளவதைத் தவிர்க்கலாம்.
மேலும் படிக்க...
அந்த விஷயத்திற்கு ஏற்ற இதமானப் பானங்கள்!