வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை முதல் மிகக் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :
வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் 5.8 முதல் 7.6 கிலோமீட்டர் உயரத்தினாலான வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
21.05.21
மிகக் கனமழை (Very heavy rain)
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
22.05.21
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக் காற்றுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசான மழை பெய்யக்கூடும்.
வறண்ட வானிலை
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மழைபதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தின் சேத்தியாத்தோப்பு பகுதியில்10 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
21.05.21
தென் தமிழகக் கடற்பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
22.05.21 மற்றும் 23.05.21
தமிழகக் கடலோரப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக் காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தென்மேற்கு பருவமழை (South West Monsoon)
தென்மேற்குப் பருவ மழை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தொடங்கியது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நாளை ஒரு புதியக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இது வரும் 24ம் தேதி புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஒடிசா- மேற்கு வங்கக் கரையை வரும் 26ம் தேதி கடக்கக்கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மண் இல்லாமல் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர்!
மரவள்ளி கிழங்கு சாகுபடியில், மாவுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை!
தேங்காய் விலை சரிவால், கொப்பரை உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம்!