1. செய்திகள்

தென்மேற்கு பருவமழை மே 21ம் தேதி தொடங்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை

இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகவும் கருதப்படுகிறது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை காலமானது வரும் 31ஆம் தேதி கேரளாவில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுருந்த நீண்டகால வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காலம் முன்கூட்டியே வரும் 21 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

நடப்பாண்டு தொடங்கும் தென்மேற்கு பருவமழை சராசரியாக 98 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஒடிசா, பீகார், ஜார்கண்ட், வடக்கு-சத்தீஸ்கர், கிழக்கு உத்தரபிரதேசம் மற்றும் அசாம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளைத் தவிர்த்து, நாட்டின் மற்ற எல்லா பகுதிகளிலும் மழை சராசரி அளவாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

மேலும், மத்தியகிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 23 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது எனவும், இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த மூன்று நாட்களில் மேலும் வலுவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பிடிக்க...

PM-Kusum Yojana க்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் ஆன்லைனில் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்தவேண்டாம் - மத்திய அரசு!!

Ather Energy மின்சார ஸ்கூட்டர் காப்புரிமை கசிந்தது!

English Summary: Southwest monsoon likely to start on May 21 says Meteorological Center !!

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.