மழைக்காலத்தில் வேகமாகப் பரவும் நோய் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கும், சில எளிய பாராம்பரிய மருத்துவ முறைகளை மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மழைக்காலத்தில் பரவும் நோய்களில் இருந்து தற்கொள்வதற்கு முன்னெச்சரிக்கையாக சில யுக்திகளை, பாரம்பரிய முறைகளைக் கையாளுவது இன்றையத் தேவையாக மாறிவிட்டது.
இதனைக் கருத்தில்கொண்டு, பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்படும் சில இயற்கையான வழிமுறைகளை (Home remedies) மத்திய ஆயுஷ் அமைச்சகம் (Ministry of Ayush) வெளியிட்டுள்ளது.
மஞ்சள் பால் (Tumeric Milk)
தங்கப்பால் (Golden Milk) என்று அழைக்கப்படும் மஞ்சள் தூள் போட்ட பால். உடலில் பாதிப்பு ஏற்படுவதற்கான ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், மஞ்சள் தூள் போட்ட பாலை மழைக்காலத்தில் அடிக்கடி பருக வேண்டும். அவ்வாறு பருகுவதால், மஞ்சள், சிறந்த கிருமிநாசினியாகச் செயல்பட்டு, உடலின் உட் புறத்தையும், அகப்புறத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிப்பதுடன், நோய் நம்மை அணுகாமல் தடுக்வும் மஞ்சள் பால் உதவுகிறது.
ஆவி பிடித்தல் (Steam)
ஒருநபர், காய்ச்சல், சளியால் அவதிப்படுபவராக இருந்தால், ஓரளவுக்கு சூடான தண்ணீரில் ஆவி பிடிப்பது நல்லது. அதில், தேயிலை எண்ணெய், புதினா, ஓமம் இவ்வற்றில் ஏதேனும் ஒன்றைப் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், தலையில் சேர்ந்துள்ள தேவையில்லாத நீர், மூக்கு வழியாக வெளியேறிவிடும்.
களிம்பு (Paste)
புதினா, ஓமம் இலைகள் மற்றும் யூகலிப்டஸ் இலைகளைச் சேர்த்து அரைத்து களிம்பு செய்து, தொண்டையில் தேய்த்தால், தொண்டை அடைப்பு உள்ளிட்டவற்றுக்கு உடனே தீர்வு கிடைக்கும். இவை மூன்றும் கலந்த களிம்பு ஆயுர்வேத மருந்துக் கடைகளிலும் (Ayurvedic Stores) விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது கொரோனா தொற்று தீவிரம் அடைந்திருப்பதால், அதில் இருந்தும், மழைக்கால நோய் தொற்றில் இருந்தும் தப்பித்துக்கொள்வது மிக மிக முக்கியமாகும். அதிலும், தலைவலி, சுவாசப் பிரச்சனை, உடல் வலி, இருமல், மூக்கு அடைப்பு, சளி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தால், அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
மேலும் படிக்க...
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்!!
சருமப் பராமரிப்புக்கு கைகொடுக்கும் மாதுளை!