1. வாழ்வும் நலமும்

சருமப் பராமரிப்புக்கு கைகொடுக்கும் மாதுளை!

Daisy Rose Mary
Daisy Rose Mary
மாதுளை
Image credit by: Wallpaper cave

பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடல் ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைக்கின்றன. அப்படி அளவிடமுடியாத நன்மைகள் அளிக்கும் பழங்களில் தனி இடம்பிடிப்பது மாதுளை.

ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சரும பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ,பெண்களால் அதிகம் விரும்பி பயன்படுத்தப்படும் பழமாகவும் மாதுளை விளங்குகிறது


மாதுளையின் சரும பயன்கள் (Pomegranate skin benefits)

பிரித்தால் செக்கச் சிவந்த சுளைத் தரும் மாதுளம் பழத்தில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதில் இடம்பெற்றுள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்வரஸ், வைட்டமின் சி, கே, பொட்டாசியம், சோடியம் ஆகியவை, அழகு பராமரிப்பிலும் அளப்பரிய நன்மைகளை வாரி வழங்குகிறது.

அழகு பராமரிப்பில் மாதுளையை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

image credit: Sylecraze

கிளென்சிங் (Cleansing)

முக அழகிற்கான பேஷியல் செய்வதில், முதல்படி கிளென்சிங் (Cleansing). இதற்கு மாதுளையின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கொண்டு முகத்தை கிளென்சிங் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்தில் உள்ள அழுக்குகள், எண்ணெய்கள் உள்ளிட்ட அனைத்தும் நீக்கப்படுகின்றன. மேலும் இதில் அடங்கியுள்ள ப்ளவோனாய்ட்ஸ், (Flavonoids) மற்றும் (Punicic acid) முகத்திற்கு அதிக ஈரப்பதத்தை அளித்து பொலிவாக மாற்றுகிறது.

ஸ்க்ரப் (Scrub)

மாதுளை விதைகளை பன்னீர் அல்லது சர்க்கரையுடன் கலந்து அரைத்து, முகத்தில் தேய்த்து, சிறிதுநேரம் கைகளால், மென்மையாக மசாஜ் (Massage) செய்ய வேண்டும். அப்போது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைதும் வெளியேறிவிடும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை மென்மையாகக் கழுவினால், முகம் ஒளிர்வதைக் காணமுடியும்.

ஸ்கின் டோன்னிங் (Skin Toner)

மாதுளை சாற்றை முகத்திற்கு இயற்கையான ஸ்கின் டோனராக (Skin toner) பயன்படுத்தலாம். இதனுடன் ஆப்பிள் சைடர் வினிகரை (Apple Cider Vinegar) சேர்த்து கலவையாக்கி முகத்திறகு பூசலாம். இவ்வாறு செய்வதால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. மேலும் சருமத்தின் வெளிப்புற அடுக்கினைப் பாதுகாப்பதுடன், இறந்த உயிரணுக்களுக்கு பதிலாக புதிய உயிரணுக்களை உருவாக்குவதால், காயங்கள் மறைந்துவிடுகின்றன.

பேஸ் மாஸ்க் (Face mask)

மாதுளை சாற்றுடன், பென்டோனைட் கிளே (Bentonite Clay) சேர்த்து அல்லது முல்தானி மட்டியுடன் கலந்து பேஸ் மாஸ்க்காக போடலாம். சுமார் ஒரு மணிநேரம் உலரவிட்டு பிறகு கழுவிவிடவும். இதன்மூலம் மாதுளை முகத்தில் உள்ள செல்களின் மூலக்கூறுகளை இருகச்செய்வதுடன், தோலில் ஊடுவி எளிதில் ஆக்ஸிஜனேற்றம் அடைய வழிவகை செய்கிறது. இதனால், சருமம் மென்மையாகவும், வசீகரத்துடனும் மாறுகிறது. மேலும் சருமத்தில் இருந்து ஈரப்பதம் வெளியேறுவது முற்றிலும் தடுக்கப்படுகிறது.


Image credit by: Wallpaper Memory

பாக்டீரியா எதிர்ப்பு

மாதுளையில் உள்ள ஃபூனிசிக் அமிலம் (Punicic Acid) பாக்டீரியாவை தொடர்ந்து நீக்குகிறது. இதனால் நாள் முழுவதும் ஈரப்பதம் மற்றும் ஆரோக்கியமான சருமம் தக்கவைக்கப்படுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் (Antibacterial) பாக்டீரியா தொற்றில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

மாதுளைப் பழங்களில் உள்ள அந்தொசியனின் (Anthocyanin) மற்றும் நீரோட்டங்கள் சருமத்திற்கு எதிரான அடிப்படைக் கூறுகளை எந்தவொரு அறையில் வளர்வதையும் தடுக்கின்றன. இதன்மூலம் சருமம் மென்மையாகவும் உறுதியாகவும் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. 

ஏன்டி-ஏஜிங் (Anti-Aging)

மாதுளை தோலின் உட்புறமும், வெளிப்புறமும் புத்துணர்ச்சியை ஊட்டுகிறது. இதன்மூலம் வயதான தோற்றத்திற்கானப் பண்புகளை, எதிர்த்து, இளமையைத் தக்க வைக்க உதவுகிறது.

Elavarase Sivakumar
Krishi jagran

மேலும் படிக்க..

இத்தனை பயன்கள் ஸ்கிப்பிங்கிலா? இது தெரியாமல் போச்சே!

பால் போல் வெண்மையான முகம் பெற இதை செய்தால் போதும்!

English Summary: How to use Pomegranate to Beauty Care Published on: 01 July 2020, 04:09 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.