பிறந்த குழந்தைகளுக்கு முடியினை மிக பாதுகாப்பாகக் கையாள வேண்டும். அதனை வளர்க்க எளிய நடைமுறைகளை இப்பதிவில் பார்க்கலாம். குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் தலை முடி அதிகமாக இருந்தால், யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் குழந்தைகளுக்கு முடி அதிகமாக இருந்தால் அவர்கள் கூடுதல் அழகாக இருப்பார்கள்.
இந்த நிலையில் குழந்தைகளைப் பெற்ற அனைத்து அம்மாக்களும் குழந்தைகளின் முடி வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். அத்தகைய நிலையில் குழந்தையின் முடி வளர்ச்சிக்கு எனப் பல்வேறு பாதுகாப்பான எண்ணெய்களை நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். அவ்வகையில் சில குறிப்பிடத்தகுந்த எண்ணெய்களின் பட்டியல் வருமாறு:
- தேங்காய் எண்ணெய்
- ஆலிவ் எண்ணெய்
- பாதாம் எண்ணெய்
- அவகேடா எண்ணெய்
- ரோஸ்மரி எண்ணெய்
தேங்காய் எண்ணெய்: குழந்தைகள் முதல் பெரியவர்களின் முடி வளர்ச்சிக்குத் தேங்காய் எண்ணெய் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பல்வேறு வைட்டமின்கள் குறிப்பாக வைட்டமின் ஈ, குழந்தையின் முடி வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுகிறது. ஆகவே குழந்தைகளுக்குத் தினமும் தேங்காய் எண்ணெய் கொண்டு தலையினைத் தேய்த்தல் நல்லது. அதிலும், தலைமுடி வேர் வரை மசாஜ் செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் தலைமுடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும் எனக் கூறப்படுகிறது.
ஆலிவ் எண்ணெய்: குழந்தைகளின் முடியினை அடர்த்தியாக வளர செய்ய உதவும் எண்ணெய்களில் ஒன்றாக இந்த ஆலிவ் ஆயில் உள்ளது. அதோடு, இந்த ஆலிவ் எண்ணெய் பெண்களின் முகத்திலும் தடவ உபயோகப்படுத்தப்படுகிறது. நீங்கள் குழந்தைகளை தலைக்கு குளிக்க வைப்பதற்கு முன்னதாக சிறிதளவு ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தீப்பிடிக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி! முதலிடத்தில் தமிழகம்!!
பாதாம் எண்ணெய்: இதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இருப்பதால் குழந்தைகளுக்குத் தினமும் இதனைத் தலைக்குப் பயன்படுத்தும் பொழுது முடி வளர்ச்சி அதிகமாகிறது. எண்ணெய்யைச் சிறிதளவு மட்டும் எடுத்துக் கொண்டு மசாஜ் செய்யும்பொழுது தலைமுடி வேரிலிருந்து நுனிவரை ஆரோக்கியமாக வளர உதவியாக இருக்கிறது.
மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ரூ.2500 மானியம்|பாரம்பரிய சாகுபடிக்கு மானியம் அறிவிப்பு!
அவகோடா எண்ணெய்: அவகோடா எண்ணெயில் தலைமுடிக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்புகள் அதிகளவில் இருக்கின்றன. ஆகவே குழந்தைகளுக்கு இந்த எண்ணெய்யினை வேரிலிருந்து நுனிவரைத் தேய்க்கும் போது முடி எவ்வித சேதம் மற்றும் இடையூறு இல்லாமல் வளர்கின்றது. அதோடு முடிக்கு நல்ல ஈரப்பதத்தையும், வலிமையையும் தருகிறது.
மேலும் படிக்க: ஆழ்குழாய் கிணறு அமைக்க 100% மானியம்|ஆட்சியர் அறிவிப்பு|விவசாயிகளுக்கு அழைப்பு!
ரோஸ்மேரி எண்ணெய்: ரோஸ்மேரி எண்ணெய் பாரம்பரியமாக முடி வளர்ச்சிக்கு நல்ல உதவியாக இருக்கின்றது. இதில் உள்ள பல்வேறு விதமாக ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இது தலைமுடியை அதிகளவில் வளரச்செய்வதில் மிகுந்த பங்கு வகிக்கிறது.
மேலும் படிக்க: பாரம்பரிய விவசாயத்திற்கு மானியம்|மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் தகவல்!
குழந்தைகளுக்கு இது போன்ற எண்ணெய்களை முதல்முறையாக உபயோகிக்கும்பொழுது சிறிதளவு எடுத்து ஒரு பகுதியில் தடவி செக் செய்ய வேண்டும். அதாவது ஏதேனும் அலர்ஜி வருகிறதா எனப் பார்த்து இல்லை என உறுதியான பின்னர் பயன்படுத்துவது நல்லது என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது.
மேலும் படிக்க
நோய் எதிர்ப்பு சக்தி முதல் கல்லீரல் பிரச்சனை வரை! அற்புதமான பலன்களை அள்ளித் தரும் பழம்!