Health & Lifestyle

Sunday, 14 November 2021 04:23 PM , by: Elavarse Sivakumar

Credit : Wikipedia

மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக, அசைவ உணவுக் கடைகளில் பொதுவாக இறைச்சியைக் காட்சிப்படுத்த குஜராத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அசைவ உணவகங்கள் (Non-vegetarian restaurants)

குறிப்பாக அசைவ உணவுக்கடைகளில் கண்ணாடி அறையில், இறைச்சியை மசாலா தடவிக் காட்சிக்கு வைத்திருப்பதும், வெளிப்புறம் தெரியும்படி மசாலாவில் வறுப்பதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

உணவகங்களில் இந்த செயல் அவ்வழியே செல்வோரையும், சைவப் பிரியர்கைளையும் முகம் சுழிக்க வைக்கிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண அதிரடியாகக் களமிறங்கியுள்ளது, குஜராத் மாநிலத்தில் வதோதரா மாநகராட்சி.

மாநகராட்சி உத்தரவு (Corporation order)

உணவுக் கடைகளில் பொதுவாகக் காட்சிக்கு வைத்திருக்கும் முட்டை உட்பட அசைவ உணவுகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷன் (விஎம்சி) வாய்மொழி உத்தரவினை வழங்கியது.

இதுகுறித்து பேசிய விஎம்சியின் நிலைக்குழு தலைவர் ஹிதேந்திர படேல் கூறுகையில்,

  • அனைத்து உணவுக் கடைகளும், குறிப்பாக மீன், இறைச்சி மற்றும் முட்டை போன்ற அசைவ உணவுகளை விற்கும் கடைகள், சுகாதார காரணங்களுக்காக உணவு நன்கு மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  • அவை போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் முக்கிய சாலைகளில் இருந்து பொதுவாக காட்சிப்படுத்தப்படுவதில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

  • மேலும் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடாது என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

 

  • பெரும்பாலான மக்கள் இந்தக் கடைகளை கடந்து செல்லும்போது அதன் வாசனையால் வெறுப்பு உணர்வை அடைகிறார்கள், மேலும் பலர் கோழியை வெளியே தொங்கவிடுகிறார்கள்.

  • விற்பனையாளர்கள் 15 நாட்களுக்குள் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

நெல்லிக்காய் சாகுபடிக்கு ரூ.1,50,000 வரை அரசு மானியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)