Health & Lifestyle

Tuesday, 05 October 2021 07:56 AM , by: R. Balakrishnan

Benefits of drinking nutritious flour

முளை கட்டிய பயறு, தானியத்தில் தேவையான புரதம், விட்டமின்கள் (Vitamins), கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, தாதுக்கள், இயற்கை குணம் மாறாமல் முழுமையாகக் கிடைக்கும்.

இவற்றில் இயற்கையாக உள்ள மாவுச் சத்தில் பெரும் பங்கு, உடலுக்கு வேண்டிய சக்தியை தருகிறது. இதனால், முளை கட்டாத தானியங்கள், பருப்பைக் காட்டிலும், முளை கட்டியதில் மாவுச் சத்து குறைந்து, நுண்ணுாட்டச் சத்துக்கள் அப்படியே இருக்கும்; எளிதில் செரிமானமாகும்.

நன்மைகள்

  • முளை கட்டிய பயறு, தானியங்களில் செய்த சத்து மாவு கஞ்சியை தினமும் பருகுவதால், உடலுக்கு சக்தி கிடைப்பதோடு, நோய் எதிர்ப்பு தன்மை (Immunity) அதிகரிக்கும்.
  • ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
  • உடல் பருமனைக் குறைக்க உதவும்.
  • 'ஒமேகா' அதிக அளவில் இருப்பதால், நல்ல கொழுப்பை அதிகப்படுத்தி, கெட்ட கொழுப்பை ரத்த நாளங்களில் படியாமல் தடுக்கும்.

முளைவிட்ட தானியத்தில் ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளது. முளைவிட்ட பயிரை சாப்பிட்டால், புத்துணர்ச்சி பிறக்கும். முளைக்கட்டிய தானியத்தில் பாசிப்பயிறு, சோளம், கொள்ளு போன்ற தானியங்கள் உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது.

தானியங்களை முளைக்கட்ட பாசிப்பயிறை, சாப்பிடக்கூடிய அளவில் எடுத்து, காலையில் தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். இரவு கைக்குட்டை  அளவுள்ள பருத்தி துணியில் சுற்றி, முடிச்சுப் போட்டு வைக்க வேண்டும். மறுநாள் பார்த்தால், முளைவிட்டு வளர துவங்கியிருக்கும்.

காலையில் வெறும் வயிற்றில், இதை உட்கொள்வது மிகச்சிறந்தது. இதை சாப்பிட்ட பின், அரை மணிநேரம் கழித்து தான், தேநீர் அல்லது மற்ற உணவுகளை  உட்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க

இன்றைய சூழலில் நம் உடல்நலம் காக்க தூதுவளை தான் தேவை!

பாதங்களை பாதுகாக்கும் பயனுள்ள பயிற்சிகள்: தெரிந்து கொள்வோம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)